வெள்ளி, 20 அக்டோபர், 2017

மோடியும் சினிமா நடிகர்களும் ராணுவ உடையில் ! யாரோட மேக்கப் உசத்தி ? Fancy Dress Competition,,,

tamilthehindu : ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரின்  எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ வீர்ர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.
பிரதமர் மோடியுடன் இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில்  தலைமை ராணுவ அதிகாரி பிபின் ராவத் மூத்த ராணுவ அதிகாரிகளும் பலரும் உடனிருந்தனர். இந்தக் கொண்டாட்டத்தின்போது பிரதமர் ராணுவ உடை அணிந்து ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் மோடி ராணுவ வீரர்களுடனான தீபாவளி கொண்டாட்டத்தில்  பிரதமர் மோடி பேசும்போது, ”ராணுவ வீரர்களை எனது குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடுகிறேன். ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது எனக்கு பெருமையாக உள்ளது. எமது படைவீரர்கள் தாய்நாட்டை மிகுந்த செல்வாக்குடன் பாதுகாத்து வருகின்றனர்” என்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு காஷ்மீரில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவை அடுத்து அம்மாநில மக்களுடன் மோடி தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக