செவ்வாய், 31 அக்டோபர், 2017

பிகார் !கண்ணையா குமார் கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர் CPI Kanhaiya Kumar Bihar 2019 Lok Sabha polls

CPI to field Kanhaiya Kumar from Bihar in 2019 Lok Sabha polls
நக்கீரன் : 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், பீகார் மாநிலத்தில் கன்னைய்யா குமார் கம்யூனிஸ்ட் கட்சிக்காக போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவரும், முன்னாள் மாணவர் யூனியன் தலைவருமான கன்னைய்யா குமார், கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் அஃப்சல் குருவிற்காக நடைபெற்ற விழாவில் சம்மந்தம் கொண்டிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கன்னைய்யா குமாரின் பெயர் நாடு முழுவதும் முற்போக்காளர்களால் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், வருகிற 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னைய்யா குமாரை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கன்னைய்யா குமார் அவரது சொந்த ஊரான பெகுசாராவில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும், பெகுசாராய், ககாரியா, மதுபானி மற்றும் மோட்டிஹாரி உள்ளிட்ட சிபிஐ பெரும்பான்மை உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேபோல், கேரளாவின் கம்யூனிஸ்ட் யூனியன் அமைப்புகளும் கன்னையாவை தேர்தலில் நிறுத்த ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சிபிஐ தேசிய கவுன்சிலின் செயலாளர் கே.ஆர்.நாராயணா, கன்னைய்யா குமாரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னரே, அவர் எங்கு போட்டியிடுவார் என்பது உறுதியாகும். குறிப்பாக அவர் சொந்த தொகுதியான பெகுசாராவில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக