ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பட்டாசு வெடித்தால் டெங்கு வராது .. அறிவு கொழுந்துகள் சுமந்த ராமன் , நாராயணன் திருப்பதி கூட்டறிக்கை

Suba.Veerapandian : · பட்டாசு வெடித்தால் #டெங்கு வராது- நாராயணன். வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது - ஓர் அமைச்சர். டெங்குவையே தாங்கி விடலாம் போலிருக்கிறது
palanivel.manickam.: இந்த இரண்டு பதிவுகளை எழுதியவர்கள் சுமந்த் சி.ராமன் என்று ஊடகங்களால் மட்டுமே நம்பப்படும் பல்துறை விற்பன்னர் மற்றும் பாஜகவின் நாராயணன்,சமூகத்தில் சிறந்த அறிவாளிகள் என பொதுவெளியில் ஊடகங்களால் நம்ப வைக்கப்பட்டிருப்பவர்கள்,
ஆனால் அவர்களோ தாங்கள் சார்ந்த ஒரு மதத்தை,அதன் சம்பிரதாயங்களை,பண்டிகைகளை தூக்கிப்பிடிக்க எந்த அளவு கீழ் இறங்குகிறார்கள் என்றால் மக்கள் சமூகத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடிய, சுற்றுசூழலை மாசுபடுத்தக்கூடிய,ஆறறிவு இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற மனிதனை மற்ற அறிவு சிற்றிவு உயிரினங்களையும் பாதிக்கக்கூடியது பட்டாசு என்பதை அறியாதவர்களா அவர்கள்? இல்லை, தங்கள் மதவெறியின்பால் அதனை வலிந்து திணிக்கிறோம் என்பதை அறிந்தே மிகவும் அறியாமையில் இருக்கும் மனிதர்களை விட அறிந்தே செய்கிறார்கள் இந்த முகமூடி இந்துத்துவ மனிதர்கள்...

பட்டாசு வெடிப்பதால் டெங்கு கொசுக்கள் ஒழியும் என பொய் பரப்புரையை செய்யும் அதேவேளையில் லட்சக்கணக்கான ஆஸ்துமா மற்றும் சுவாசு கோளாறு உள்ள மனிதர்களை இந்த பட்டாசு புகை பாதிக்கும் என்பதை அறியாதவர்களா இவர்கள்,இதில் ஒருவர் மருத்துவர் என்பது கூடுதல் சிறப்பு.
பட்டாசு அற்ற விழாக்களை கொண்டாடுவோம்.அடுத்தவரின் துன்பங்களை சில நொடிகள் சிந்தித்து மாற்றம் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக