சனி, 28 அக்டோபர், 2017

தொல்.திருமாவளவன் : தமிழிசைக்கு என்மேல் ஏன் காழ்ப்புணர்ச்சி?


நக்கீரன் : தமிழிசைக்கு என்மீது தனிப்பட்ட முறையில் என்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியாக மெர்சல் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்தோம். நடிகர் விஜய்யை தங்களது கட்சிக்கு ஆதரவாக வளைத்து போட முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்தாகவும், அதற்கு தன் மீது தமிழிசை அபாண்டமான அவதூறு பரப்பினார் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழிசையின் அவதூறுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்தனர். காவல்துறை முன்னிலையிலே கரூரில் விடுதலை சிறுத்தைகள் மீது பா.ஜ.கவினர் தாக்குல் நடத்தினர். தமிழக காவல்துறை அதிமுக கட்டுப்பாட்டில் இருக்கின்றதா அல்லது பா.ஜ.க கட்டுப்பாட்டில் இருக்கின்றதா என தெரியவில்லை,


மயிலாடுதுறையிலும், கரூரிலும் விடுதலை சிறுத்தைகள் மீது நடந்த தாக்குதலை பார்த்தாலே யார் ரவுடித்தனம் செய்து இருக்கின்றார்கள் என்பது தெரியும். ஆனால் ராஜாவும், தமிழிசையும் விடுதலை சிறுத்தைகளை ரவுடிகள் என்று சொல்வதாகவும் யார் ரவுடித்தனம் செய்கினறனர் என்பது மக்களுக்கு தெரியும்.

நாகரீகம் கருதி விடுதலை சிறுத்தைகள் அமைதியாக இருக்கின்றோம், பா.ஜ.க வின் இந்த போக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்டுப்பாட்டை சீண்டிப்பார்ப்பது போல இருக்கிறது. கந்துவட்டி பிரச்சினை, ஜி.எஸ்.டி, மதவாத அரசியல் போன்றவற்றிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் போராட வேண்டும். சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் நாகரீகமாக செயல்பட வேண்டும்.

சீண்டுவோரும், தூண்டுவோருக்கும் யாரும் பலியாகிவிடக்கூடாது. பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு என்மீது தனிப்பட்ட முறையில் என்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை. நவம்பர் 3 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.கவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். அருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக