தினமணி :லக்னௌ:நாடாளுமன்றம்,
ஜனாதிபதி மாளிகை
உள்ளிட்ட அடிமைச் சின்னங்களை இடித்து தள்ளுங்கள் என்று
சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஆஸம் கான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்
நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநிலத்தின் சர்தானா தொகுதி
பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ சங்கீத் சோம், 'தாஜ் மஹால் இந்திய
கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை' என்று பேசி இருந்தார். அத்துடன் முகலாய
மன்னர்கள் இங்குள்ள இந்தியர்களை அடிமைப்படுத்தியவர்கள்; இந்துக்களை அழிக்க
நினைத்தவர்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு அரசியல்
வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அம்மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவாக
இருப்பவர் ஆஸம் கான். தனது அரசியல் எதிரிகளுக்கு இவர் அளிக்கும் அதிரடி
அரசியல் கருத்துக்கள் சர்ச்சையினை உண்டாக்கும் வகையில் புகப்பெற்றவை. அவர்
தாஜ்மஹல் குறித்த சங்கீத் சோமின் கருத்துகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றில் பதில் அளித்திருந்தார்.அதில் அவர் கூறியதாவது:
நான் அவருக்கெலாம் பதில் அளிக்கப்
போவதில்லை. ஆனால் நான் பொதுவாகவே இந்தியாவில் உள்ள அடிமைச் சின்னங்கள்
அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறவன். முகலாயர்கள் இந்தியாவை
அடிமைப்படுத்தியது உண்மைதான். அவர்கள் எப்படி இந்தியாவுக்குகள்
வந்தார்கள்? அவர்களை யார் அழைத்தார்கள் என்ற விபரங்களுக்குள் நான் போக
விரும்பவில்லை. அது தேவை இல்லாதா கசப்பான விவாதங்களை உண்டாக்கும்.
ஏன் தாஜ்மஹலை மட்டும் குறிவைக்க வேண்டும்?
நாடாளுமன்றம் ஏன் இல்லை? ஜனாதிபதி மாளிகை ஏன் இல்லை? குதுப்மினார்தான் ஏன்
இல்லை? தில்லி செங்கோட்டை ஏன் இல்லை? ஆக்ரா கோட்டை ஏன் இல்லை? இவை யாவுமே
நம்மை அடிமைப்படுத்தியவர்களின் அடையாளங்கள்தானே?
பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில
முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர், 'நான்
ஏற்கனவே பெரிய அரசருக்கும், சின்ன அரசருக்கும் இத்தகைய அடிமைச் சின்னங்களை
இடித்து தரைமட்டமாக்க வேண்டுஞ் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன். அவர்கள்
முதலில் இடிக்கட்டும். பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
இவ்வாறு அவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக