வெள்ளி, 13 அக்டோபர், 2017

"வடகொரிய வர்த்தக கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகத்துக்கு செல்ல ஐ.நா. தடை

UN bans 4 ships from global ports for violating N Korea sanctions ... maalaimalar: :வடகொரியாவின் 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
 நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் வடகொரியா மீது புதிய தடை விதித்தது. அதன்படி அந்த நாட்டின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக