செவ்வாய், 3 அக்டோபர், 2017

லதா ரஜினிகாந்த் . அவர் ( ரஜினி ) வந்தால் நன்மை செய்வார் ...

Lakshmi Priya .Oneindia Tamil சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா விதத்திலும் அவர் நன்மை செய்வார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் அரசியல் குறித்து கடந்த மே மாதம் பேசியதோடு சரி. அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளையின் நிகழ்ச்சி ஒன்றில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார். அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும். அவர் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றார் லதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக