மாலைமலர் : டெல்லியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது
கணவரை போலீசார் கைது செய்தனர்
புதுடெல்லி: டெல்லியின் ரோஹினி பகுதியை சேர்ந்தவர் பங்கஜ் மெக்ரா. தொழில் அதிபர். இவருடைய மனைவி பிரியா மெக்ரா. நேற்று முன்தினம் அதிகாலை பங்கஜ் மெக்ரா தனது மனைவி மற்றும் 2 வயது மகனுடன் காரில் வீட்டுக்கு வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பிரியா மெக்ரா உயிர் இழந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, தனக்கும் மற்றொரு நபருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்ததாகவும், அதில் தன்னை கொல்ல முயற்சித்த போது மனைவி தவறுதலாக இறந்துவிட்டதாகவும் பங்கஜ் மெக்ரா, போலீசாரிடம் கூறினார். ஆனால், பங்கஜ் மெக்ரா கூறுவது முரண்பாடாக இருப்பதாக கருதிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, பங்கஜ் மெக்ரா தனது மனைவியை தானே கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பங்கஜ் மெக்ரா, பிரியாவுக்கு பின் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இது தொடர்பான பிரச்சினையில் அவர் முதல் மனைவி பிரியாவை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக