வியாழன், 12 அக்டோபர், 2017

லைக்கா நிறுவனத்தில் வருமான வரி சோதனை ...

தினமலர் : மத்திய, ஜி.எஸ்.டி., புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 'லைக்கா' திரைப்பட நிறுவனம், இரண்டு கோடி ரூபாய் வரி செலுத்தாமல் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை, அண்ணா சாலையில், இலங்கையைச் சேர்ந்த, திரைப்பட நிறுவனமான, 'லைக்கா' செயல்படுகிறது. இது, விஜய் நடித்த, கத்தி உட்பட, பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. கமலின், சபாஷ் நாயுடு மற்றும் ரஜினியின், 2.0 உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தில், அக்., 7ல், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். இது பற்றி, அதிகாரிகள் கூறியதாவது: லைக்கா நிறுவனம், திரைப்பட வினியோக உரிமை உள்ளிட்டவற்றுக்கு, உரிய அளவில், சேவை வரி செலுத்தாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு சோதனை நடத்தியதில், இரண்டு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. அதில், 50 லட்சம் ரூபாயை, அவர்கள் உடனடியாக செலுத்தினர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக