ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மருத்துவர்களை பார்த்து கைகூப்பி அழுத சசிகலா ,, எப்படியாவது காப்பாற்றுங்கள் ...

வெப்துனியா :பரோலில் இருந்து வெளியே வந்த சசிகலா இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ,தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சென்னை வந்ந சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில், சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் நடராஜனை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் இன்று காலை அவர் சென்றார்.அங்கு நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். அந்த சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது, நடராஜன் உடல் நலம் தேறி வருகிறார்.

கல்லீரலும், கிட்னியும் நன்றாக செயல்படுகிறது. பயப்பட வேண்டாம். இன்னும் 10 நாட்களில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். அதன் பின் 3 மாதங்கள் அவர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின் வழக்கமான பணிகளில் அவர் ஈடுபடலாம்” என சசிகலாவிடம் மருத்துவர்கள் கூறினார்.

;அப்போது மருத்துவர்களை கையெடுத்து கும்பிட்ட சசிகலா “என் கணவரை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். எனவே, அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர் உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், நான் நலமாக இருக்கிறேன். என்னைப் பற்றி கவலைப்படாதே என நடராஜன், சசிகலாவிடம் கூறியதாக தெரிகிறது. அதன்பின் சிறுதி நேரம் அங்கிருந்து விட்டு அவர் தி.நகர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக