திங்கள், 30 அக்டோபர், 2017

கனமழை ! சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மாலைமலர் :வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை
பெய்து வருவதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை சென்னை: தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை சுற்று வட்டாரங்களில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலையில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிமை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக