சனி, 21 அக்டோபர், 2017

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்: ரிசர்வ் வங்கி விளக்கம்

tamilthehindu : வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விளக்கத்தின்படி, வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் அல்ல என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் படி, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், 2017 ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. அந்த விதிமுறைகள் அப்படியே அமலில் உள்ளன. எனவே, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக