tamilthehindu :மத்திய அரசுக்கோ, மருத்துவக்
கவுன்சிலுக்கோ ‘நீட்’ தேர்வு நடத்த சட்டப்படி அதிகாரமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர், கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு “நீட்‘ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் சேர முடியும் என்பதற்கான மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில், ஒரு அவசர சட்டத் திருத்தமாக, 24 மே 2016இல் செக்சன் பிரிவு 10-D என்பது உள்ளே நுழைக்கப்பட்டது. அதோடு 33ஆவது பிரிவில் (ma) என்பதுடன் புதிதாக (mb) என்ற பிரிவும் கூடுதலாக நுழைக்கப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்தால் ‘நீட்‘ தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் மருத்துவப் பல்கலைக்கழகங்களான எய்ம்ஸ், ஜிப்மர் (AIIMS, JIPMER) போன்ற மருத்துவக் கல்லூரி களுக்கு, நீட் தேர்வில் இருந்து, விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அவசரச் சட்டம் (Ordinance) 5.8.2016 இல் திருத்தச் சட்டமாக மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.
இது சட்ட வலிமை பெற்ற சட்டத் திருத்தமா?
மத்திய அரசு இயற்றிய சட்டம், இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள வலிமையையும், அதிகாரத்தையும் பெற்ற ஒன்று அல்ல; (suffers from the vice of legislative competency). எனவே, இந்த சட்டப் பிரிவின் நுணுக்கங்களையும், அரசியல் சட்ட விதிகளுக்கு இது முர ணாக உள்ளது என்பதையும் நீதிமன்றங்களுக்குச் சென்று சரியான முறையில் எடுத்து வைத்து விளக்கி வாதாடினால், புதிதாக நுழைக்கப்பட்ட பிரிவுகளான 10D செக்ஷன் 33 இல் (mb) என்ற பிரிவு அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதால், செல்லாது என்று தீர்ப்பளிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அந்த அடிப்படையில், பல்வேறு அரசியல் சட்டப் பிரிவுகளையும் எடுத்துக்காட்டி, இப்படி ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர, மத்திய அரசுக்கோ அல்லது மெடிக்கல் கவுன்சில், டெண்டல் (பல்) கவுன்சில் ஆகியவற்றுக்கோ தேர்வை நடத்த, அதிகாரம் இல்லை.
பல்கலைக் கழகத்திற்கே உள்ள தனி உரிமை!
மாணவர்கள் சேர்க்கை விதிகள் குறித்துத் தீர்மானிக்கும் மற்றும் தேர்வு நடத்திடும் உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உள்ள உரிமையாகும். அந்த உரிமையை மத்திய அரசோ அல்லது மருத்துவக் கவுன்சிலோ, பல் மருத்துவக் கவுன்சிலோ பறித்துக்கொள்வது அரசியல் சட்டத்தின் மற்ற பிரிவு களுக்கு முரணான, உரிமைப் பறிப்பு ஆகும். அதுவே, அரசியல் சட்ட விதிகளின்படி நுணுக்க விளக்கமாகும்.
எப்படியென்றால்,இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரப் பகுப்புப்படி,ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கும் (Incorporating/ Establishing) மற்றும் ஒழுங்குபடுத்தும் (Regulating) அதிகாரம், மாநிலங்களுக்குள்ள தனித்த அதிகாரமாகும். எனவே, அதில் மாண வர் சேர்க்கை எப்படி அமையவேண்டும்; எந்த அடிப்படையில் எத்தகைய தேர்வு நடத்தப்பட வேண் டும் என்று முடிவு செய்யும் கடமை, உரிமை, அதிகாரம், பல்கலைக் கழகங்களின் தனித்த உரிமையாகும்.மத்திய அரசுக்கு எந்தப் பல்கலைக் கழகத்தையும் நேரிடையாக நிறுவும் / ஒழுங்குப்படுத்தும், அதிகாரம் இல்லாததால் அது பல்கலைக் கழக அதிகாரங்களில் நுழைந்து பறிக்கும் உரிமையும் கிடையாது என்பதே இந்திய அரசியல் சட்டத்தின் நிலைப்பாடு.
ஒவ்வொரு பல்கலைக் கழகச் சட்டமும் குறிப்பிட்ட பட்டப் படிப்புகளை உருவாக்கி, மாணவர்களை எப் படிப்பட்ட தகுதிகளின்படி தேர்வு செய்வது என்பது பல்கலைக் கழகங்களின் தனி அதிகாரம் ஆகும்.
சட்டம் இயற்றும் உரிமை
அரசியல் சட்ட ஏழாவது அட்டவணையில் (VII Schedule) இரண்டாவது பட்டியலில் (List II) மாநிலப் பட்டியல் (State List) 32 ஆவது (Entry 32) பிரிவில்/எண்ணில் மாநிலங்களின் உரிமை எனக் கூறப்பட்டுள்ளது என்ன?
‘‘32. Incorporation, regulation and winding up of corporation other than those specified in List I and universities; unincorporated trading, literary, scientific, religious and other societies and associations; co-operative societies.’’
இதன் தமிழாக்கம்:
‘‘பட்டியல் 1இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்க லான மற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத் துவது, பதிவை ரத்து செய்வது மற்றும் கூட்டுறவு சங் கங்கள் உட்பட, வணிக, கல்வி, அறிவியல், மத மற்றும் இதர சங்கங்கள்’’ ஆகியவை மீது சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கானது என்பதாகும்.
அதாவது, அரசியலமைப்பில் மாநில பட்டியலில் எண் 32 இன்படி, பல்கலைக்கழகங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தால் அது மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்.
அதே ஏழாவது அட்டவணையில், மத்திய அரசின் தனித்த சட்டமியற்றும் அதிகாரம், பட்டியல் ஒன்றில் (List I) குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 44ஆவது எண் (Entry 44) கீழ்க்கண்டவாறு உள்ளது.
“44. Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities.”
இதன் தமிழாக்கம்:
‘‘பல்கலைக்கழகங்கள் நீங்கலான, ஒரு மாநிலத்திற் குள் மட்டுமே செயல்படும் நோக்கம் கொண்டிராத, வணிக நிறுவனம் அல்லது வேறு நிறுவனம் ஆகிய வற்றைப் பதிவு செய்வது, கட்டுப்படுத்துவது, பதிவை ரத்து செய்வது.’’
எனவே, மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த இரண்டு விதிகளும் (அதாவது மாநிலப் பட்டியலில் 32 ஆவது மற்றும் மத்தியப் பட்டியல் 44 ஆவது பதிவுகள்) தெளிவாகக் கூறுவது என்னவென்றால்,பல்கலைக் கழகங்களை உருவாக்குவதோ, அமைப் பதோ, ஒழுங்குபடுத்துவதோ, மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ள அதிகாரம்; (அதை மற்ற அமைப்புகள் பறிக்க முடியாது). பட்டியல் 1 இல் எண் 44 இல், அதா வது மத்தியப் பட்டியல் பல்கலைக் கழகங்களை அமைக்கும் அதிகாரம் விலக்கப்பட்டிருக்கிறது (specifically excluded)
நாம் மேலே சுட்டிக்காட்டியது, இந்தியாவின் இதர மாநிலங்களுக்குப் பொதுவாக உள்ள சட்ட நுணுக்கம்.
மேற்சொன்ன சட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்நீதிமன்றங்களிலோ, உச்சநீதிமன்றத் திலோ வாதாடி ‘நீட்’ தேர்வு சட்டம் அரசியல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக உள்ளதால் செல்லாது என்று நீதிபதிகளுக்கு விளங்கும்படி வாதங்களை எடுத்து வைத்து வழக்குத் தொடுத்தால், சட்டப்படி, நியாயப்படி வழக்குத் தொடுப்பவர்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.காரணம், சட்ட விதிகளின்படி ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய கடமை உயர்நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் உரியதல்லவா? பொதுவான சட்ட நிலைப்பாடு - சட்ட முரண்கள் - இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் - ‘நீட்’ தேர்வை எதிர்த்து இந்த நிலைப்பாட்டை - சட்ட நுணுக்கத்தை அடிப்படை வாதங்களாக வைத்து வாதாடலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்...
எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டின் நிலை வேறுபட்டதாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தால் 2007ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சியில், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கு தனித்த நுழைவுத் தேர்வு தேவையில்லை என்ற சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மத்திய அரசின் சட்டத்திற்கு ஒப்பானதாகும்.
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்பது மத்திய அரசின் அறிவிக்கை (Notification) கீழ்தான் வெளியிடப்பட்டுள்ளது. 2016 திருத்தச் சட்டத்தின் மூலம் அல்ல.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, தமிழ்நாடு அரசு சட்டமன்றம் 2007இல் கொள்கை முடிவாக எடுத்து இயற்றிய சட்டம், கடந்த 9 ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு முறைக்கு எதிரான அதன் வலிமை பறிக்கப்பட முடியாத ஒன்று.
மேற்கண்ட திருத்த சட்டத்தின் மூலம்,புதிதாக சேர்க்கப்பட்ட 10D பிரிவு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டங் களுக்கு முரணாக உள்ளது என்பது சட்டப்படி சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ்நாடு M.G.R. பல்கலைக்கழக சட்ட மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான விதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அச்சட்டம் Entry 32, List II-இன் கீழ் இயற்றப்பட்டதாகும். அந்த அதிகாரம் மத்திய அரசுக்குத் தரப்படவில்லை.
சட்டப் போராட்டத்தை வலிமையுடன் நடத்தவேண்டும்!
“10D, There shall be conducted a uniform entrance examination to all medical educational institutions at the undergraduate level and post-graduate level through such designated authority in Hindi, English and such other languages and in such manner as may be prescribed and the designated authority shall ensure the conduct of uniform entrance examination in the aforesaid manner:” என்பதாகும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகங் களுடன் இணைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில்(Affiliated Colleges) மாணவர்களின் சேர்க்கையானது அப்பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படியே இருக்க வேண்டும். அதனைக் கட்டுப்படுத்த (To regulate) மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
இன்னும்பலப்பலசட்டஅதிகாரங்களுக்குமுரண் பட்டே ‘நீட்’ தேர்வு முறை மாநிலங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பதால் இதனைப் பற்பல கோணங்களிலும் எடுத்து வைத்து முழுமையாக வாதாட வேண்டும்.
இதனை ஒத்தக் கருத்துள்ளவர்கள் நீதிமன்றங் களுக்குச் சென்று வழக்குகள் தொடுப்பதன்மூலம் நீதி கிடைக்கப் போராட வேண்டியது அவசரக் கடமை யாகும்!
இது அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்குள்ள உரிமையாகும். மத்திய அரசு விலக்குத் தருவது கருணையோ, சலுகையோ, பிச்சையோ ஆகாது.
எனவே, மாநில அரசுகள் குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை வலிமையுடன் திறமை மிக்க, மூத்த வழக்குரைஞர்கள் மூலம் வாதாட முன் வரவேண்டியது அவசர, அவசியமாகும்!
இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார் கி.வீரமணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக