Pregnant woman beaten to death in West Bengal நக்கீரன் :மருத்துவப் பரிசோதனையில் பெண் குழந்தை என்று காட்டியதால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவப்பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதில் அவரது வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது உறுதியானது. இதனால், கடந்த சில தினங்களாக அந்தப்பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் சகோதரியால் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை மீண்டும் தாக்கப்பட்டபோது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கர்ப்பகாலத்தில் என்ன குழந்தை வயிற்றில் இருக்கிறது என்பதை அறிய இந்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக