திங்கள், 23 அக்டோபர், 2017

நடிகர் விஷால் மீது வருமானவரி சோதனை ... எச்ச ராஜா ஆன்லைனில் மெர்சல் பார்த்த விடயம் ..

நக்கீரன் :விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு குழு மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் 3 பேர் ஏசி வெங்கடேசன் தலைமையில் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல். சோதனை குழுவினர் tn18 aj4621 என்ற பதிவெண் கொண்ட காரில் வந்து சென்றனர். இதன் பின்னர், விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு குழு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்படியானால், விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார் என்ற மர்மம் எழுந்துள்ளது.,,   இது புது ரக ஆர் எஸ் எஸ் வருமானவரி சோதனையாளர்கள் ? இனி  புதுசு புதுசா ஆர் எஸ் எஸ் சி பி ஐயும் வரும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக