வெப்துனியா : கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டிலேயே இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்து புன்னகைக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.<>திமுக தலைவர் கருணாநிதிக்கு முதுமை காரணமாக
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் தீவிர அரசியலில்
ஈடுபடாமல் கோபாலபுர இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் செயல்
தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<>இந்நிலையில் அவ்வப்போது திமுக தலைவர்
கருணாநிதியின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் குறித்து
வதந்திகள் பரவும் போது புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.
இந்நிலையில் திமுகவின் 15-வது அமைப்பு
தேர்தலையொட்டி, கட்சியின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு,
உறுப்பினருக்கான கட்டணத்தையும் வழங்கி தன்னை மீண்டும் உறுப்பினராக
புதுப்பித்துக்கொண்டார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி.
இந்த நிகழ்ச்சியின் போது திமுக செயல்
தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து கருணாநிதி புன்னகைத்தார். அப்போது திமுகவை
சேர்ந்தவர்களும், கருணாநிதி குடும்பத்தினரும் அருகில் இருந்தனர். இந்த
புகைப்படம் அவரது முகநூல் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இது தற்போது வைரலாக
பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக