வியாழன், 26 அக்டோபர், 2017

மதம் மாறுவேன்” -மாயாவதி எச்சரிக்கை..! கோடிக்கணக்கான மக்களோடு சேர்ந்து ....

சமூகம், சாதி, மதம் போன்ற விஷயங்களில் பாஜக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளா விட்டால் கோடிக்கணக்கான மக்களுடம் இந்து மதத்தில் இருந்து விலகி பௌத்த மதத்தை தழுவுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் உத்திரபிரதேச மாநில முதல்வருமான மாயாவதி நேற்று அஸாம் கார்க் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில்:-
“கோவில்களை கட்டுவதால் ஏழைகளுக்கு எந்த விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை. தலித் மக்கள் பழங்குடிகள்
புறக்கணிக்கப்படுகிறார்கள்.வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வில்லை. கல்வி அரசியல் சமூக பொருளாதாரத்தில் அடிப்படை உரிமைகள் ஏழைகளுக்கு மறுக்கப்படுகின்றன. பாஜகவினரும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் சாதி மதம் தொடர்பான விவகாரங்களில் தங்கள் பார்வைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தலித்துக்கள், பழங்குடியினர், பிறப்படுத்தப்பட்ட மக்களையும் திரட்டி கோடிக்கணக்கான மக்களுடன் இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறும் நிலை ஏற்படும்” என எச்சரித்துள்ளார் மாயாவதி.  தமிழரசியல் .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக