செவ்வாய், 17 அக்டோபர், 2017

பாஜகவின் கதை முடிகிறது ... நிச்சயமான தோல்வியை நோக்கிய பொருளாதாரம் ...?

Prakash JP : மோடி நேற்று குஜராத்தில் பேசியபோது, அவரின் கண்களில் மரண பீதி தெரிந்தது.. அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஆட்சியிலிருப்பது பிஜேபி, அதிலும் 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் மோடி, இப்போது மத்தியிலும் நான்கு ஆண்டுகளாக பிஜேபி ஆட்சி, மோடி பிரதமர்.. ஆனாலும், நேற்றைய கூட்டத்தில், பிஜேபி மோடியின் சாதனைகளையோ, வளர்ச்சிகளையோ பேசாமல், காங்கிரஸ் & சோனியா / ராகுல் குறித்து மட்டுமே மோடியும் அமித் ஷாவும் பேசினார்கள்.. தாங்கள் தான் ஆளும் கட்சி என்பதை மறந்து, காங்கிரஸ் இன்னும் ஆட்சியில் இருப்பதை போல, இவர்கள் சவால்விடுத்து கேள்வி கேட்டபது காமடியான இருந்தது..
 பிஜேபி வலுவாக இருக்கும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே டப்பா டேன்ஸ் ஆடுகிறது என்றால், 2019 பொதுதேர்தலில்  கதை காலிதான்
தீக்கதிர்  :  குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட தேதியை அறிவிக்காமல்  டிசம்பர் 18ம் தேதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இமாச்சல் பிரதேசத்திற்கு குறிப்பிட்ட தேதியை அறிவிக்க தெரிந்த தேர்தல் ஆணையத்திற்கு குஜராத் மாநிலத்திற்கான தேதியை கண்டுபிடிக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஜோதி ஏற்கனவே குஜராத்தில் மோடி அரசின் கீழ் பணியாற்றியவர் என்பதால் பாஜகவிற்கு ஆதரவாக மோடி சொல்படி செயல்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது என அறிவிக்கும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பாஜக ஆளும் அகமதாபாத் நகராட்சியில் 10 நிமிடத்தில் ரூ 530 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக மாநகராட்சி கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென மாநகராட்சி கூட்டத்தை மாலை 3 மணிக்கே துவங்கியிருக்கின்றனர். அதுவும் கூட்டம் துவங்கிய 10 நிமிடத்தில் ரூ 530 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதில் ரூ 130 கோடி மதிப்பில் ஒக்னஜ், சிலஜ், பகதஜ், பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ரூ 152 கோடியில் 10 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் ரூ 61 கோடியில் அஜித் மில்ஸ் பகுதியில் மேம்பாலம் அமைத்தல். ரூ 70 கோடியில் சோலா பகுதியில் 4 வழி மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் குஜராத் மாநில பொருளாளர் சுரேந்திர படேல் தெரிவித்திருப்பதாவது: மாலை 4 மணி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வருவதால் முன்கூட்டியே கூட்டம் நடத்தப்பட்டது. ஆகவே முன்கூட்டியே கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது என வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால் தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டின் கீழ் எப்பொழுதிலிருந்து சென்றிருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக