புதன், 11 அக்டோபர், 2017

தெலுங்கான அரசு காஞ்ச இலையாவிற்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும்

thetimestamil : புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது என பேராசிரியர் காஞ்ச இலையாவுக்கு எதிரான போராட்டங்களை கண்டித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தெலுங்கானாவைச் சார்ந்த தலீத்திய சிந்தனையாளர் பேராசிரியர் காஞ்ச இலையாவை தூக்கிலிடப்போவதாக பகிரங்கமாக கொலை மிரட்டலை சில சக்திகள் கொடுத்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கண்டிக்கிறது.
அவர் எழுதிய நூலை எதிர்த்து ஆந்திராவிலும் , தெலுங்கானாவிலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
அவர் எழுதிய நூல் 2011 ல் ஆங்கிலத்தில் வெளியானது ; அதிலிருந்த சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டு சிறு புத்தக வடிவில் சமீபத்தில் வெளிவந்துள்ள து. அதில் சாதியத்தின் பிரிவுகளை ஆராய்ந்து , வாணிய குலம் எப்படி வியாபாரத்திலும், தொழிலிலும் கோலாச்சியுள்ளது என எழுதியுள்ளார்.அதில் யாருக்கேனும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ; அது குறித்து விவாதிக்கலாம்;கண்டிக்கலாம் ;விமர்சனம் செய்யலாம்; அதற்கு மாற்றாக எழுதலாம்.

புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது.
இது கருத்துரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். காஞ்ச இலையாவிடமும் , மற்ற அறிவு ஜீவிகளிடமும் வாணிய குலத்தைச் சார்ந்தவர்கள் விவாதத்தை நடத்தலாம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்பாட்டங்களை கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது; இதனால் பல பிரிவி்னருக்கு இடையே கர்னூலில் நடந்தது போல மோதல் ஏற்படுகிறது.
தெலுங்கான அரசு காஞ்ச இலையாவிற்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக