திங்கள், 23 அக்டோபர், 2017

பிகார் .. உயர்சாதி வீட்டிற்குள் சென்றதால் காலணிகளை வாயால் சுத்தம் செய்த சவர தொழிலாளி


தீக்கதிர் :பாட்னா, சவரத் தொழிலாளி பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்றதால்  காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த அவலம் பீகாரில் அறங்கேறி உள்ளது.
பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாது. மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை.
இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ் தாக்கூருக்கு காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வேண்டுமென தண்டனை வழங்கப்பட்டது. ‘சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லாதது தனக்குத் தெரியாது’ என்று மகேஷ் விளக்கமளித்தும் பலன் இல்லை. பஞ்சாயத்தார் விளக்கத்தை ஏற்கவில்லை. கொடுத்த தண்டனையை நிறைவேற்றினர். மேலும், சிலர்அவரை செருப்பாலும் அடித்தனர்.

இது குறித்து  நாலந்தா போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். நாலந்தா டி.எஸ்.பி சுதிர் குமார் போடிகா கூறுகையில், ”குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. நாகரிகமடைந்த சமூகத்தில் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக