சனி, 28 அக்டோபர், 2017

சசிகலா,சொத்துக்களை,பறிக்க மத்திய அரசு அதிரடி,உத்தரவு

தினமலர் : புதுடில்லி: முடக்கப்பட்ட,2.2 லட்சம் போலி நிறுவனங்களின், சொத்துக்களை அடையாளம் காண, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவற்றை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அளிக்கப்பட்ட, 50 நாள் அவகாசத்தின்போது, மூன்று லட்சத்துக்கும் அதிகமான போலி நிறுவனங்களின் கணக்குகளில், 1,321 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யபட்டுள்ளது தெரிந்தது. சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட நிறுவனங்கள் குறித்து, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. ; இதை தொடர்ந்து, 2.2 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை, மத்திய அரசு ரத்து செய்தது. இவற்றில் பெரும்பாலானவை, நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாதவை. இந்த போலி நிறுவனங்களில், இயக்குனர்களாக இருந்த, 1.06 லட்சம் பேரை, நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாகக் கூறி, தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவர்கள்,5 ஆண்டு களுக்கு, பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப் பட்டது. முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டஇயக்குனர்களின் பெயர்களை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டது.  இதை முதலில் குஜராத்தில் செய்யுங்க......எவ்வளவு போலி நிறுவனங்கள் இருக்கு என்று இந்தியாவிற்கு தெரியப்படுத்துங்க
< சசி நிறுவனங்கள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள போலி நிறுவனங் களின் பட்டியலில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், கேரள முன்னாள் முதல்வர், உம்மன் சாண்டி, கேரள எதிர்க்கட்சி தலைவர், ரமேஷ் சென்னிதலா உட்பட பல பிரபலங்கள் தொடர்பு உடைய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

சசிகலா குடும்பத்திற்கு தொடர்புடைய, 'பேன்ஸி ஸ்டீல்ஸ், ரெயின்போ ஏர், சுக்ரா கிளப், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்டு பார்மாசூட்டிகல்ஸ்' ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க.,வைச் சேர்ந்த, முக்கிய பிரமுகர் மகனின் நிறுவனம் மற்றும் நடிகர் ரஜினியின்இளைய மகள், சவுந்தர்யா நடத்திய திரைப்பட நிறுவனங்களும், பட்டியலில் இடம்பிடித்து உள்ளன. போலி நிறுவனங்களின் சொத்துக் களை கண்டறிந்து அவற்றை பறிக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.< கடும் நடவடிக்கை:

இந்நிலையில், மத்திய நிறுவனங்கள் விவகார துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி, பல்வேறு மாநில அரசு பிரதிநிதிகளுடன், டில்லியில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் கூறிய தாவது:போலி நிறுவனங் களின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியை, மாநில அரசுகள் உடனடியாக முடிக்க வேண்டும். நில ஆவணங்கள் அனைத்தும் தெளிவாக இருப்பதால், சொத்துக் களை கண்டுபிடிப்பதில், பெரிய சிக்கல் இருக்காது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு, இது பெரும் உதவியாக இருக்கும்.

இது தொடர்பான தகவல்களை, நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்துடன், மாநில அரசுகள் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள வேண்டும்.போலி நிறுவனங்களின் சொத்துக் களை, வேறு பெயரில் மாற்றுவதற்கான முயற்சிகளை, துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். சொத்துக்களை மாற்ற, உதவி செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக