வெள்ளி, 6 அக்டோபர், 2017

மெர்சல் படத்துக்கு தடை இல்லை ..

விகடன்: சனா : அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. மூன்று வேடங்களில் முதல் முறையாக விஜய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. மெர்சல் இந்நிலையில் 'மெர்சலை' தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 2014-ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் `மெர்சல் ஆயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவு செய்ததால் `மெர்சல்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெர்சல் என்ற பெயரில் படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மெர்சல்' படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 'மெர்சல்' படத்தை வெளியிடவும் விளம்பரப் படுத்தவும் இருந்த தடை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 'மெர்சல்' ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக