வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஜெயலலிதா கைரேகை.! மருத்துவர் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Vikatan  கார்த்திக்.சி :ஜெயலலிதா கைரேகை விவகாரம் தொடர்பாக மருத்துவர் பாலாஜி அக்டோபர் 27-ம் தேதி நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த வருடம் சிகிச்சைக்காக மருத்துவமனையிலிருந்தபோது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் பி.பாமில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் விவகாரமாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் வில்ஃப்ரட் நேரில் விளக்கமளித்தார். அவர், 'அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதணன் அளித்த ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதுசூதனன் ஒப்புதல் கடிதத்துடன் உடல்நலம் குறித்த ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை' என்று விளக்கமளித்தார். மேலும் கைரேகை விவகாரம் தொடர்பாக மருத்துவர் பாலாஜி அக்டோபர் 27-ம் தேதி நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக