திங்கள், 30 அக்டோபர், 2017

சிதம்பரம் - குணசேகரன் நேர்காணல் ... மிக சிறந்த தொலைக்காட்சி பேட்டி.. அன்மைக் காலங்களில் !


Sivasankaran.Saravanan ": நியூஸ் 18 சேனலில் ப.சிதம்பரம் அவர்களின் நேர்காணலை கண்டேன். ப.சி யின் தெளிவான நிதானமான விளக்கங்களுடன் கூடிய இந்த பேட்டிக்காக பலர் அவரை பாராட்டுகின்றனர். சிதம்பரத்தின் ஆழ்ந்த அறிவு நமக்கு புதிதல்ல. இதில் ப.சி க்கு இணையாக பாராட்டத்தக்கவர் ஊடகவியலாளர் குணசேகரன்.
ஒரு செய்தியாளரின் முதன்மையான பணி என்பது செய்திகளை பெற்றுத்தருவதே. மாறாக பேட்டி காண்பவரை பேச விடாமல் தன்னை முன்னிலைப்படுத்திக் காட்டுவதற்காக முனைப்பு காட்டுவதல்ல. பேட்டி தருபவர் உணர்ச்சிவசப்பட்டு முகபாவங்களை மாற்றலாம், எக்சைட் ஆகலாம் ஆனால் பேட்டி எடுப்பவரும் அவருக்கு போட்டியாக எக்சைட் ஆகக்கூடாது. அச்சு ஊடகங்களாக இருந்தவரை இப்படித்தான் இருந்தது. காட்சி ஊடகங்கள் வந்தபிறகு செய்தியாளர்கள் செய்திகளை தருவதற்கு பதிலாக தங்களை பிரதானப்படுத்துவதற்கு மெனக்கெட ஆரம்பித்தது வருந்தத்தக்கது..!
அந்த வகையில் குணசேகரன் ஒரு செய்தியாளரின் வரையறைக்கு முற்றிலும் பொருத்தமானவராக திகழ்கிறார். பேட்டியின் போது திடீர் திடீரென எக்சைட் ஆகாத பாந்தமான உடல் மொழி, உணர்ச்சிவசப்படாத நிதான அணுகுமுறை, தன்னை முன்னிலைப்படுத்தி தவ்லோத் காட்டாமல் செய்திகளை நேயர்களுக்கு பெற்றுத்தருவதையே முதன்மையாக கருதுவது என நவீன கால ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஊடகவியலாளராக மிளிர்கிறார்.

சம்பந்தமே இல்லாமல் எவ்வித தர்க்கமின்றி பேசிய விஜயகாந்த் அவர்களை பேட்டி காணும்போதும் சரி, விஷய ஞானம் உள்ள சிதம்பரம் போன்ற நபர்களை பேட்டி காணும்போதும் சரி குணசேகரனுடைய முதன்மை பணி முடிந்தவரை செய்திகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதாகவே இருக்கிறது..!>வாழ்த்துகள்_குணசேகரன்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக