திங்கள், 16 அக்டோபர், 2017

அவள் புருஷனை இவள்... இவன் பொண்டாட்டியை ... இல்லத்தரசிகளுக்கு சூனியம் வைக்கும் சீரியல்கள்

Bhimraj Gandhi  ;அவளுக்கு இவ புருஷன் மேல ஒரு கண்ணு
இவனுக்கு அவ சொத்து மேல ரெண்டு கண்ணு
அவன் இவ கற்பத்த அழிக்க பாக்குறான்
இவ மாமியாகாரிய ஊட்டவிட்டு தொறத்துரா
மாபிள்ளைக்கும் மச்சானுக்கும் ஆகாது
மருமகளுக்கும் மாமியாருக்கும் ஆகாது
அண்ணிக்கும் நாத்தனாருக்கும் ஆகாது
சித்தப்பன் குடியகெடுக்க துடிப்பான்
பெரியப்பன் குடிச்சிட்டு மூலையில கெடப்பான்
ஒருத்தன் காதலிச்சுட்டு ஏமாதிடுறான்
ஒருத்தி கல்யாணம் பண்ணிட்டு ஏம்மாதிடுரா
வீட்ல இருக்கற கொழந்தைங்க எபிசீடி சொல்லவே கஷ்டப்படும்
ஆனா இவங்க கொழந்தைங்க பக்கம் பக்கமா தத்துவம் பேசும்
தேங்கா கெட்டு போயிருந்தா நாமெல்லாம் தூக்கி போட்டுட்டு வேற தேங்கா வாங்குவோம்


ஆனா இவங்க இப்படி சொல்லுவாங்க: "பொறக்க போற கொழந்தைக்கு எதுவும் நடக்காம இருக்கணும்"
கனவுல ஒரு கொலை நடந்தா... அடுத்த நாள் அந்த பார்ட்டி காலி!
பொறந்த குழந்தைக்கு ராசி சரியில்லனா.. பரிகாரம் பண்ணனும்!
குடும்பத்துக்கே தொஷம்னா... பரிகாரம் பண்ணனும்!
எல்லா கஷ்டத்துக்கும் காரணம்... கடவுள் நம்பள சோதிக்குறான்!
எல்லா கஷ்டத்துக்கும் தீர்வு.... கடவுள நம்புறது!
காட்ட வேண்டியது ஒரு உசந்த சாதி ஹிந்து குடும்பம்
காட்டவே கூடாதது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள்
நூறு வாரம் கஷ்டபடுத்தி 101வது வாரம் இப்படி சொல்லணும்
"கடவுள் கஷ்டத்த கொடுகரான, இப்படி ஒரு நல்லதுக்கு தான்"
--- நான் எதை பத்தி பேசுறேன்னு உங்களுக்கே தெரியும்!!! ----

இப்படிக்கு
என்றும் கடுப்புடன்
பீம் பிரபா காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக