வெள்ளி, 20 அக்டோபர், 2017

மகாவீரர் இறந்தநாள் தீபாவளி என்பதில் உள்ள கேள்விகள் ... விளக்கங்கள்

Surya xavier.: சமணத்தின் மகாவீரர் இறந்தநாள் தான் தீபாவளி என்றால்
சமணத்தின் புலால் மறுப்பை தானே கடைபிடிக்க வேண்டும்? அன்று புலால் உண்ணலாமா? முரண்பாடாக இருக்கிறதே என்ற கேள்வியை நணபர்கள் எழுப்பினர்
இதில் முரண்பாடே இல்லை
மக்களின் எந்த ஒரு செயலும் ஆதிக்க வர்க்கம் அனுமதித்த ஒன்றே.அவர்கள் விருப்பப்படி இங்கு எதுவும் இல்லை. பௌத்தமும் சமணமும் மட்டுமே புலால் மறுப்பை தங்கள் கொள்கை பிரகடனமாகக் கொண்டிருந்தன. பார்ப்பனியத்தின் எந்த ஒன்றிலும் புலால் மறுப்பு கொள்கையாக இல்லை. அது அரசியலுக்காக மட்டுமே அதை தேவைக்குப் பயன்படுத்தும்
சமணத்தின் மகாவீரர் தான் பார்ப்பனியத்திற்கு நரகாசூரன். அவர் இறந்தததால் தீபாவளி.புலால் மறுப்பை கொள்கையாகக் கொண்ட அவர் இறந்த அன்று புலால் உண்ண வைத்ததை குல தெய்வ வழிபாட்டின் நீட்சியோடு இணைத்தது
குல தெய்வ வழிபாட்டில் நீத்தார் நினைவாக எண்ணெய் தேய்த்து தலை முழுகி கறி உண்பது தமிழர் மரபு. இதில் பார்ப்பனியத்திற்கு இரண்டு வகையான வெற்றி இருக்கிறது

ஒன்று மகாவீரரின் மறைவு
இரண்டு அவரின் புலால் மறுப்பு கொள்கையை தகர்க்கும் ஏற்பாடு
ஒன்றை எப்போதும் அறியுங்கள்
செய்திகள் என்பது ஆளும் வர்க்கம் தன் தேவைக்காக மக்களுக்கு சொல்ல நினைப்பது மட்டுமே.
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை அது ஒருநாளும் சொல்வதில்லை
நாம் தான் அது சொல்வதிலிருந்து தெரிய முயல வேண்டும்
ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக