வெள்ளி, 20 அக்டோபர், 2017

சிதம்பரம் : குஜராத் தேர்தல் திகதியை தீர்மானிக்கும் சலுகையை மோடியிடம் வழங்கிய தேர்தல் ..

குஜராத்தில் தேர்தல் தேதியை முடிவு செய்ய பிரதமருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது: ப.சிதம்பரம்குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தை முன்னாள் மத்திய நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். புதுடெல்லி: மாலைமலர் :இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 12-ம்தேதி
ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அன்றைய தினம் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.< ஆனால், அன்று குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. இருப்பினும் டிசம்பர் 18-ம் தேதிக்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதித்துறை மந்திரி சிதம்பரமும் தேர்தல் கமிஷனை விமர்சித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் சிதம்பரம் கூறியிருப்பதாவது:-</ குஜராத் அரசு அம்மாநிலத்தில் அனைத்து இலவசங்களையும், சலுகைகளையும் அறிவித்த பின்னர் நீண்ட விடுப்பில் இருந்து தேர்தல் ஆணையம் மறுபடி அழைக்கப்படும். குஜராத் தேர்தல்களின் இறுதி தேதியை முடிவுசெய்ய பிரதமருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக