வியாழன், 5 அக்டோபர், 2017

குஜராத் கொலைவெறியாட்டம் .. மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!


முதல்வராக இருந்த நரேந்திர மோடி உட்பட சிலருக்குப் பங்கு உண்டு என்றும் கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி மாவட்ட நீதிமன்றத்தில்
minnambalam : குஜராத் கலவரம் தொடர்பாக ஜகியா ஜாப்ரி என்பவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. ரயில் இருந்த கர சேவகர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 1044 பேர் உயிரிழந்தனர், 2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், சொத்துகளை இழந்து அகதிகளாய் நின்றனர்.
இந்தக் கலவரத்தைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடி உட்பட சிலருக்குப் பங்கு உண்டு என்றும் கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, மீண்டும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜகியா ஜாப்ரி 2014-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை இன்று (அக் 5) விசாரித்த நீதிபதி, சோனியா கோகனி கலவரத்தில் பெரும் சதி ஏதும் இல்லை. மோடிக்கும் குற்றவாளிகளுக்கும் எந்தத் தொடர்பும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
தீர்ப்புக்குப் பிறகு பேசிய ஜகியா “நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்தது அதிர்ச்சியாக உள்ளது. தன் கண்முன்னே நடந்தது இனப் படுகொலை., கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களையும் அடியோடு அழித்தனர். இந்தக் கலவரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக