தினத்தந்தி : குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14-ந்
தேதிகளில் நடைபெறுகிறது. 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
என தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர்
நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜனதா சார்பில் விஜய்
ரூபானி முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்த மாநில சட்டசபையின்
பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. எனவே புதிய அரசை தேர்வு
செய்வதற்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி
நேற்று வெளியிட்டார்.<
அதன்படி 182 இடங்களை கொண்ட
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக
19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி
வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு (14 மாவட்டங்கள்)
14-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை<
முதற்கட்ட
தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி வெளியாகிறது.
அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 21-ந் தேதி வேட்புமனு தாக்கலுக்கான
இறுதி நாள் ஆகும். வேட்புமனு பரிசீலனை 22-ந் தேதியும், வேட்புமனுக்களை
திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் 24-ந் தேதியும் ஆகும்.
முன்னதாக
இமாசல பிரதேச சட்டசபை தேர்தலை கடந்த 12-ந் தேதி அறிவித்த தேர்தல் கமிஷன்,
குஜராத் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனையும், மத்திய அரசையும் குறை கூறி
வந்த நிலையில், குஜராத் தேர்தல் தேதி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது
இதைப்போல
2-ம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பர் 20-ந் தேதி வெளியாவதுடன், அன்றே
வேட்புமனு தாக்கலும் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள்
27-ந் தேதி. இந்த வேட்புமனு பரிசீலனை 28-ந் தேதியும், வேட்புமனுக்களை வாபஸ்
பெறுவதற்கான இறுதி நாள் 30-ந் தேதியும் ஆகும்.
2
கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர்
18-ந் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
ஒப்புகைச்சீட்டு
இந்த
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 50,128 வாக்குச்சாவடிகள்
நிறுவப்படுகின்றன. இதில் தொகுதிக்கு ஒன்று வீதம் 182 வாக்குச்சாவடிகள்
முற்றிலும் பெண்களால் இயக்கப்படும். மேலும் இந்த தேர்தலில் வாக்காளர்கள்
யாருக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு
வழங்கப்படுகிறது.
இந்த தகவல்களை வெளியிட்ட தலைமை
தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி, குஜராத் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும்
நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக