திங்கள், 9 அக்டோபர், 2017

தமிழகத்தில் 85 பேர் பலி... சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Suganthi Oneindia Tamil சென்னை:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை காய்ச்சலால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை ஆவடியையடுத்த திருமுல்லைவாயில் பகுதியச் சேர்ந்தவர் இமயவரம்பன். இவரது மனைவி குணவதி கடந்த 15 நாட்களாக பன்றிக் காய்ச்சலால் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் குணமாகாத காரணத்தால் அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிறி இறந்தார். >இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் பேசுகையில் டெங்குக் காய்ச்சலால் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்த அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் காய்ச்சலுக்கு 85 பேர் பலியாகியுள்ளதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் இன்று டெங்குக் காய்ச்சலுக்கு 14 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 10 பேர் பலியாகினர். கடந்த சில நாட்களாக தினம் சராசரியாக 5-7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக