திங்கள், 2 அக்டோபர், 2017

உத்தர பிரதேசம் ,, காவல் நிலையத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் .... உதவி காவல் ஆய்வாளர்!.

மின்னம்பலம் : காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகே பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) குடிபோதையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தாஜ்வீர் சிங், காவல் நிலையத்துக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கூச்சல் சத்தத்தைக் கேட்டு வந்த ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து அந்தச் சிறுமியை மீட்டனர்.
ஆத்திரமடைந்து காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்த பொதுமக்கள், தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக இருக்கும்படி உயரதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக அந்த சப்-இன்ஸ்பெடர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக