செவ்வாய், 3 அக்டோபர், 2017

நடிகர் சங்கம் .. புதிய ஊழல் குற்றச்சாட்டு .. 6 கோடி ... கமல் , விஷால் உள்பட பலர் மீது சந்தேகம்?

நடிகர் சங்கத்தை விஷால்
தலைமையிலான அணி கைப்பற்றிய பிறகு நடந்த பொதுக்குழுவில், சங்கத்தின் வளர்ச்சிக்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை... தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள். "தன்னிச்சையான இந்த முடிவால் விஷால் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நடிகர்சங்க அறக்கட்டளையைச் சேர்ந்த கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஆறுகோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறார்கள். மேலும் சங்க கணக்கு வழக்குகளிலும் ஏகப்பட்ட முறைகேடுகளும் சதிகளும் நடந்துள்ளன. எனவே அனைவர் மீதும் மோசடி வழக்குத் தொடர வேண்டும்" என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார் நடிகர் சங்க உறுப்பினரும் பத்திரிகையாளருமான வாராகி. மனு மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஒரு வாரத்திற்குள் பதில் தெரிவிக்குமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 03-ஆம் தேதியுடன் அந்தக் கெடு முடிவடைவதால், எடப்பாடி போட்டுள்ள க்ரீன் சிக்னலால், கமல் மீது வழக்குப் போடலாமா என தீவிர ஆலோசனையில் இருக்கிறது சென்னை மாநகர போலீஸ். (மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்) -ஈ.பா.பரமேஷ்வரன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக