வியாழன், 5 அக்டோபர், 2017

குஜராத்தி காந்தி குஜராத்துக்கு கொடுத்தது –ரூ.26.25 லட்சம் ,,,. இதர முழு இந்தியாவுக்கும் கொடுத்தது – ரூ.28 லட்சம் மட்டுமே! காங்கிரஸ் பணத்தில் .....

krishnavel.T.S : காந்தி கணக்கு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, நாடு போற்றும் இந்த மனிதர் இந்திய விடுதலைக்கு பெரும் பங்காற்றியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சமூக விடுதலைக்கு இவர் எதையும் செய்ததில்லை.
ஒரு மனிதரின் பிறந்தாநாள் அன்று அவரை குறைகூறி எதுவும் எழுதக் கூடாது என்பது என் எண்ணம்,
அதனால் அவர் மீது இருக்கும் என் மனக்குறையை வெளிப்படுத்தும் விதமாக, “ஒரு நாள் காரில் செல்லும்போது” என்ற வகையில் ஒரூ வேடிக்கை பதிவு போட்டேன்,
இத்தனைக்கும் அது நான் எழுதியது கூட அல்ல வெறும் பகிர்வே.
அந்த பதிவில் ஒரு நண்பர் வந்து உங்கள் மேலே எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன், இப்படி தரம் தாழ்ந்து எழுதுவதா என்று கேட்டார்
அவருக்காகவே இந்த காந்தி கணக்கு சிறப்பு கட்டுரை.
1919-ல் தான் காந்தி காங்கிரஸ்சில் சேர்ந்தார், ஆனாலும் விரைவாக அதன் அசைக்கமுடியாத சக்தியாக அவர் மாறி விட்டார். அப்போது இந்திய விடுதலை போராட்ட செலவுகளுக்கு நிதி வேண்டும் என்று இந்தியா முழுவதும் பணம் வசூல் செய்யப்பட்டது,
அந்த நிதிக்கு திலக்ஸ்வராஜ் ஃபண்ட் என்று பெயர். அப்போது, அந்த நிதிக்கு காந்தி நிர்ணயித்த இலக்கு ஒரு கோடி ரூபாய்.

என்னது வெறும் ஒரு கோடி தானா என்று கேட்பவர்கள் மனதில் கொள்ளவேண்டியது, 1920-ல் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.87 மட்டுமே. அதாவது அன்றைய விலையில் சுமார் 5,347 கிலோ தங்கம் வாங்க முடியும். இன்றைய மதிப்பில் 1590 கோடி ரூபாய்க்கு சமம்.
இந்த நிதியை சேகரிக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பர்தோலி காங்கிரஸ் மாநாட்டில் காந்தி பேசியபோது, தீண்டாமை குறித்து அவர் சொன்னது என்னவென்றால்
“தீண்டாமை ஒழிப்பு என்பது, ஸ்வராஜியம் தத்துவத்துக்கு, எந்த வகையிலும் குறைந்ததில்லை, தீண்டாமையை எப்பாடு பட்டாவது நாம் ஒழிக்கவேண்டும். தீண்டாமையின் சிறு சாயல் மீதம் இருந்தாலும் ஸ்வராஜியம் என்பது அர்த்தமற்ற வேற்று முழக்கமே. காங்கிரஸ் பணியாளர்கள், தங்கள் எல்லா பணியிடங்களிலும் தீண்டாமையை முற்றிலுமாக விலக்க வேண்டும், என்னை பொருத்தவரையில் தீண்டாமை ஒழிப்பே ஸ்வராஜியம் அடைவதில் செய்யவேண்டிய மிகவும் முக்கிய பணி ஆகும்”
எல்லோரும் காந்தியாரின் பேச்சுக்கு பலமாக கைதட்டினார்கள்.
1921-முதல் 1923-வரை, திலக்ஸ்வராஜ் ஃபண்ட் நிதிக்கு வசூலான தொகை மொத்தம் ரூ.1,30,19,415. இந்த பணத்தில் இருந்து அதே மூன்றாண்டுகளில் தீண்டாமை ஒழிப்புக்கு காங்கிரஸ் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா
மொழிபெயர்ப்பில் தவறு வந்துவிட கூடாது என்பதால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சின் கணக்கு புத்தகங்களில் உள்ள ஆங்கில பெயர்களை அப்படியே பயன்படுத்தி உள்ளேன்
1. Rajamuhendry Depressed Class Mission Rs. 1,000
2. Antyaj Karyalaya, Ahmedabad Rs. 5,000
3. Antyaj Karyalaya, Ahmedabad Rs. 17,381
4. Depressed Classes Work in Andhra Rs. 7,000
5. National Social Conference for Depressed Classes Work Rs. 3,000
6. Tamil District P.C.C. for Depressed Classes Work Rs. 10,000
Total Rs. 43,381

பர்தோலி மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பே, தலையாய கடமை என்று முழங்கிய காந்தி மற்றும் அவரது காங்கிரஸ் கட்சி இறுதியில் தீண்டாமை ஒழிப்புக்கு செலவு செய்த பணம் வெறும் ரூ.43,381 மட்டுமே
மொத்த வசூலான தொகையான ரூ. 1,30,19,415-யில் இருந்து 1921-1923-வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் பல்வேறு பணிகளுக்கு செலவு செய்த மொத்த தொகை ரூ.49.5 லட்சம்,
அதில் அவர்களால் தீண்டாமை ஒழிப்புக்கு செலவு செய்ய முடிந்ததே வெறும் ௦.87% மட்டுமே
சரி செலவு செய்த தொகையான ரூ.49.5 லட்சம் மாநிலங்கள் வாரியாக எப்படி பிரித்து கொடுக்கப்பட்டது, என்று பார்த்தால் இன்னும் வேடிக்கை
1. காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்க்கு –ரூ.26.25 லட்சம்
2. மற்ற எல்லாமநிலங்களுக்கும் சேர்த்து – ரூ.28 லட்சம்
இதை தான் காந்தி கணக்கு என்று சொல்வது
இது பற்றி இன்னும் விரிவாக எழுத முடியும், இன்று அவர் பிறந்த நாள் என்பதால் இத்துடன் நிறுத்திகொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக