வியாழன், 19 அக்டோபர், 2017

சோமாலியா குண்டுவெடிப்பு 230 பேர் உயிரிழப்பு

Kalai Marx : சோமாலியாவில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பில் 230 பேர் ப‌லி. அதைக் க‌ண்டித்து‌ ஒரு காக‌மும் க‌ரைய‌வில்லை. சோமாலியாவுக்காக‌ யாரும் பிரார்த்திக்க‌வில்லை. " Je suis Somalia" என்று சோமாலியாக் கொடியை புரொபைலில் போட‌வில்லை.
இதுவே அமெரிக்கா அல்ல‌து மேற்கு ஐரோப்பாவாக‌ இருந்திருந்தால்....? ஒருவ‌ர் ம‌ட்டும் ப‌லியாகி இருந்தாலும் இந்நேர‌ம் க‌ண்ட‌ன‌ங்க‌ள் சூடு ப‌ற‌ந்திருக்கும். க‌ண்ணீர் அஞ்சலிக‌ள் க‌ளை க‌ட்டி இருக்கும். ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு சாப‌ம் போட்டு திட்டித் தீர்த்திருப்பார்க‌ள்.
ஆனால்.... ஆனால்.... சோமாலியாவில் ந‌ட‌ந்த‌து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லாக‌ இருந்தாலும்..... ப‌லியான‌வ‌ர்க‌ள் ஆப்பிரிக்க‌ர்க‌ள் அல்ல‌வா? அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி யாருக்கு க‌வ‌லை? ஐரோப்பிய‌ர்க‌ளுக்கு வ‌ந்தால் இர‌த்த‌ம். சோமாலிய‌ர்க‌ளுக்கு வ‌ந்தால் த‌க்காளி ச‌ட்னி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக