உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட சுகாதாரமற்ற 500 நகரங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் இந்தியாவில் உள்ள பத்து நகரங்கள் உள்ளது. இரண்டாவது இடத்தில் குவாலியர் ஆரம்பித்து 50 இடங்களுக்குள் மொத்தம் 22 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. டெல்லி 11 வது இடத்தில் உள்ளது அதனை சுற்றியுள்ள மாநிலங்களும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது
.savukkuonline.com : பாஜக வழங்கும் மதவாத தீபாவளி அரசியல் வெடி. முதலில் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.“காச கரியாக்கணும்” இந்த வாக்கியத்தில் தான் பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கும். வருமானத்திற்கு ஏற்றார் போல வெடிகளின் தன்மை அமையும், கொஞ்சம் பின்தங்கிய குடும்பங்களின் வசனம் “அவன் வெடிச்சாலும் அதே சத்தம் தான், நீ! வெடிச்சாலும் அதே சத்தம் தான், அவன் நெருப்பு மட்டும் வைக்கட்டும், நீ சந்தோஷப்பட்டுக்கோ”. இதில் எந்த வாக்கியங்களும் வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு பிடித்ததாக இருக்காது. எனக்கு பிடித்ததாக இருந்தது இல்லை.
இதில் பலரும் தீபாவளி பட்டாசு ஏக்கத்துடனே தான் வளர்கிறார்கள். கொஞ்சம் சம்பாத்தியம் எல்லாம் பார்த்தவுடன். அந்த வருடத்தில் வரும் தீபாவளி பட்டையை கிளப்பும், ஏக்கங்கள் எல்லாம் அள்ளி கொட்டி பட்டாசுகளை வாங்கிகுமித்து, வெடித்து வேக்கையை தனித்துக் கொள்ளுவது தான். பட்டாசுக்கள் மீதான மோகம் என்பது இன்றும் வயது பாரபட்சமின்றி எல்லோரிடத்திலும் ஒட்டிஇருக்கும்.
பல வருடங்கள் முன்பு சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் வேலை அமர்த்தப்படுகிறார்கள், பட்டாசுகளை புறக்கணியுங்கள் என்று பிரச்சனை ஓடியது. அது உண்மையாகவும் இருந்திருக்கலாம். சில காலங்கள் கழித்து சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை, தாராளமாக வாங்கலாம் என்று செய்திகள் வெளியானது.
சில வருடங்களுக்கு முன்பு சீனா பட்டாசுகள் சந்தைகளை அலங்கரித்தது. கூடவே சர்ச்சைகளும் கிளம்பியது. சீனா பட்டாசுகள் இந்திய பட்டாசுகள் சந்தையை குலைக்க செய்த சதி என்றார்கள், “குட்டி ஜப்பானான” சிவகாசியில் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றார்கள். அதே போல சீனா பட்டாசுகளினால் சுற்றுசூழல் பாதிக்கும் அபாயங்கள் அதிகம் என்றும் கூறினார்கள். அப்போதைய சுற்றுசூழல் மற்றும் வனங்கள் காப்பக அமைச்சர் ஜெயந்திநடராசன், சீனா பட்டாசுகளால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது மற்றும் இதனை இறக்குமதி செய்ய எந்த ஒரு லைசன்ஸும் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று பாராளமன்றத்தில் பதிலளித்தார். அது அரசாங்க ஏடுகளிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இணைப்பு
“சுற்றுசூழல் மாசு”
இந்த முறையும் பட்டாசை சுற்றி சுற்றுசூழல் மாசு பிரச்சனைகள் துவங்கியுள்ளது. ஒரு சாதாரண வெகுசனத்திற்கு துவங்கும் முதல் கேள்வி, “அட! ஒரு நாளில் வெடிக்கப்படும் பட்டாசில் அப்படியா, சுற்றுசூழலில் மாசு ஏற்பட்டு ஓசோனில் உள்ள ஓட்டை பெரியதாகிவிடப் போகிறது” என்பது தான்.
இந்தியாவில் சுற்றுசூழல் மாசு பற்றி சொல்லியா தெரிய வேண்டும், கோமுக்கில் துவங்கும் பாகிரதி நதி சுத்தமாக உருண்டோடி வாரணாசியில் நாறடிக்கப்பட்டு கடலில் கலக்கின்றது. இங்கு தமிழ்நாட்டில் உதாரணங்கள் ஏராளம் ஒரத்துப்பாளையம் அணை முழுக்க இரசாயன கழிவு தண்ணீரை தேக்கிவை த்திருக்கும் ஒரே மாநிலம் நாமாக தான் இருப்போம். இணைப்பு
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட படித்தேன். நமக்கு கர்நாடகாவில் முழுக்க மழை வெளுத்து வாங்குகிறது என்பது தான் தெரியும். கர்நாடகாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகிறது, அங்குள்ள ரசாயன கழிவுகள் பொண்ணாறிலும், தென்பெண்ணையிலும் கலந்தே தமிழ்நாட்டிற்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுகிறார்கள் என்ற பிரச்சனை கூட வந்தது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட சுகாதாரமற்ற 500 நகரங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் இந்தியாவில் உள்ள பத்து நகரங்கள் உள்ளது. இரண்டாவது இடத்தில் குவாலியர் ஆரம்பித்து 50 இடங்களுக்குள் மொத்தம் 22 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. டெல்லி 11 வது இடத்தில் உள்ளது அதனை சுற்றியுள்ள மாநிலங்களும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது தான் டெல்லிக்குநெருக்கடி.
பட்டாசு தடை
சென்ற வருடம் டெல்லியில் கொண்டாடப்பட்ட தீபாவளி பற்றி புகைப்படங்களைதேடிப் பார்த்தல் புரியும், காற்றில் கலந்த தூசிகள் அடங்க இரண்டு வாரங்கள்ஆகியுள்ளது. இங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
அப்படி என்ன பிரச்சனை என்றால், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் டெல்லி சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரியூட்டுவார்கள். கழிவுகள் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை மூன்றரை கோடி டன். அதிலிருந்து கிளம்பும் தூசி காற்றில் மிதந்து டெல்லி வரை சென்று, அந்த மாசு அடங்க பல வாரங்கள் (சென்ற வருடம் எல்லாம் மாதங்கள் ஆனது) ஆகும். டெல்லியின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிடும். சென்ற வருடம் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறையே அளித்தார்கள். டெல்லி அருகாமையில் உள்ள மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிக்கின்றார்களா? என்பதைகண்காணிக்க செயற்கைகோள் உதவியுடன் வேவு பார்த்த நிகழ்வுகளும்உண்டு.
சென்ற வருடம் மூன்று குழந்தைகளால் ஒரு வழக்கு பதியப்படுகிறது. அது தீபாவளியன்று பட்டாசின் மீதான தடை கோரிய வழக்கு. ஆனால் நீதிபதிகள் ஒட்டுமொத்தமாக தடை செய்யாமல் தீபாவளி காலங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு தற்காலிக தடையாக தீர்ப்பளிக்கின்றார்கள். நன்றாக கவனிக்க வேண்டும் பட்டாசு வெடிப்பதற்கு தடை இல்லை, பட்டாசு விற்பனைக்கு தற்காலிக தடை மட்டுமே. சென்று வருட தீர்ப்பை தான் இந்த வருடமும் குறிப்பிட்டு காட்டியுள்ளார்கள். விற்பனைக்கு தற்காலிக தடை.
இந்த விஷயம் வெளியான மறுநிமிடம் முதல் எதிர்ப்புகள் கிளம்ப துவங்கியது. எதிர்ப்புகள் எல்லாமே எப்படியானது என்பது என்றால் “நீதிமன்றங்கள் நாட்டை ஆள்வதா?”, “ஹிந்துக்கள் பண்டிகைக்கு மட்டும், இந்த தடையா? பக்ரீத்தில் கூட விலங்குகள் கொல்லப்படுகிறது, தடை செய்வார்களா? கிறிஸ்துமஸ் மரத்திற்கு தடை போடுவார்களா? எல்லாமே மத சாயம் பூசிய எதிர்ப்புகள் தான்.
ஒரு சாமானியனாக இந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்துக் கொள்ளுவது கடினம் தான். ஒரு அப்பாவி தனது எதிர்ப்பில் “இது இந்துக்களின் பண்டிகை, பட்டாசுகளை தடை போட முடியாது, என்று நீதிமன்றம்தீர்ப்பு கூறி இருந்தால். இந்த நடுநிலையாளர்கள் தூக்கில் தொங்கி இருப்பார்கள்” என்று எழுதி இருந்தார். பாவம்! இப்பவும் அவருக்கும் தெரியவில்லை, பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படவில்லை என்பது.
இப்படி சுத்தமாக மத சாயம் பூசிய எதிர்ப்புகள் மட்டுமே கிளம்பியது, நீதிமன்றம்கூட இந்த தடைக்கு மத சாயம் பூசுவது கவலையளிக்கின்றது என்று கூறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூடவே இது பட்டாசு இல்லாத தீபாவளி இல்லை, அதான் வாங்கி வைத்துள்ளதை வெடிப்பார்களே என்றும் நீதிமன்றம்தான் கூறியது.
யார் மத சாயம் பூசியது?
இந்த மத சாயங்களை பூசியது பூராவும் வெகுஜனமும் மற்றும் சில பல பாஜகஅடியாட்கள் தான். அடியாட்கள் காசுக்கு கூவுகிறார்கள், ஆனால் இந்தவெகுஜனம் எதற்கு மத சாயம் பூச வேண்டும்? அவர்களாக அப்படி பேசவில்லை. அப்படியான வகையில் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. “என்ன தான் இருந்தாலும் ஹிந்துக்கள் பண்டிகைக்கு போராடிக் கொண்டு இருக்கும் பாஜக” என்ற இமேஜ் முக்கியம் இல்லையா ?.
இந்த தகவல்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதித்த பிரபலங்கள் மற்றும் பாஜகவின் எடுபிடிகளின் பதிவுகளை நோக்கினீர்கள் என்றால் அப்பட்டமாக மதவாத ஒப்பீடாகவே இருக்கும். ஒரு கேள்வி வருவது வாடிக்கை, “மதவாத ஒப்பீடாக இருந்தாலும்,சரியாகத்தானே கேட்கின்றார்கள்” என்று, இங்கு தான் பாஜக மிக மிக மோசமான மற்றும் அபாயகரமான கட்சியாக ஜொலிக்கின்றது.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி மோடி அரசாங்கத்தின் சுற்றுசூழல் மற்றும் வனங்கள் அமைச்சர் ஹரிஷ் வர்தான் டெல்லியில் 800 பள்ளி குழந்தைகளுக்கு மத்தியில் “ஹரித் தீவாளி, ஸ்வஸ்த் தீபாவளி” அதாவது “பசுமையான தீபாவளி, வளமான தீபாவளி” என்ற பிரச்சாரத்தை துவக்குகிறார். அந்த கூட்டத்தில் பசுமையான தீபாவளி தான் நாம் கொண்டாடிக் கொண்டு இருந்தோம், இடையில் இப்படி பட்டாசுகள் நுழைக்கப்பட்டு சுற்றுசூலுக்கு கெடுதல் ஏற்பட்டுள்ளது என்று பேசியும் இருந்தார், இது அரசு செய்திக் குறிப்பிலும் உள்ளது. இணைப்பு
அதாவது இந்த அரசாங்கம் தான் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் என்று போன மாதமே அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டு அமைதியாகிவிடுகிறது, அதன் பிறகு இந்த வழக்கு தீர்ப்பை எப்படி மதவாத கலவரமாக மாற்றலாம் என்பதை இவர்களுடைய ஏஜென்ட்டுகள் கிளப்பி விட்டு அதன் மூலம் பீதியை எப்படி கிளப்ப முயற்சிக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
இங்குள்ள தமிழக பாஜக ஏஜென்ட்டுகளும் அடியாட்களும் என்னமோ நீதிமன்றம் பட்டாசுக்கு தடை விதித்தது மாதிரியும், இவிங்களுக்கு இவங்க கட்சியே பட்டாசு வெடிக்க வேண்டாம் என்பதே தெரியாத மாதிரியும், அதற்கும் சாயமெல்லாம் பூசி அப்படியே பொங்கி, வழக்கம் போல நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
பிஜேபியின் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் நோக்கங்களில் ஒரு பகுதியாக பசுமை தீபாவளி என்று ஒரு இயக்கத்தை தொடங்குகிறார். அதை அமைச்சகத்தின் வழியாக விளம்பரப்படுத்துகிறார். ஆனால், அவர்கள் அரசின் ஒரு திட்டத்தையே ஒரு மதத்தினருக்கு எதிரானது என்று கூசாமல் விமர்சனம் செய்வதில் காவிக் கட்சியினரை அடித்துக் கொள்ளவே முடியாது.
உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனையை தடை செய்து தீர்ப்பளித்த பிறகு, அதை வரவேற்று, ஒரு ட்வீட் செய்திருந்தார் டாக்டர் ஹர்ஷவர்த்தன். இது வரை பிஜேபிக்கு எதிராக கருத்து சொன்னவர்களையெல்லாம் ட்விட்டரில் ட்ரோல் செய்து, உண்டு இல்லை என்று பண்ணி, அவர்கள் ட்விட்டரை கணக்கை மூடும் வரை விரட்டுவார்கள் காவிகள். அதையெல்லாம் பல முறை பார்த்து, டாக்டர் ஹர்ஷவர்த்தன் ரசித்திருக்கக் கூடும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று, அவர் போட்ட ஒரு ட்வீட்டுக்காக, காவிப் பரிவாரங்கள் ஒரு நாள் முழுவதும் அவரை ட்ரோல் செய்ததில், சம்பந்தப்பட்ட அந்த ட்வீட்டை டெலிட் செய்தார் ஹர்ஷவர்த்தன்.
இந்து மதம் ஒரு காட்டு மரம் போன்றது. யாரும் அதற்கு தண்ணீர் ஊற்றி, வளர்த்து போஷிக்க வேண்டியதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக அது இப்படித்தான் வளர்ந்திருக்கிறது. இப்படி வளர்ந்த ஒரு மரத்தை, நாங்கள்தான் தண்ணீர் ஊற்றி வளர்த்தோம், வளர்த்துக் கொண்டிருக்கிறோம், நாங்கள் இல்லையென்றால் இந்த மரம் பட்டுப் போய் விடும். இந்து மதம் அழிந்து விடும். அதைக் காப்பாற்ற யாருமே இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி, அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை பெற்று, நிரந்தரமாக ஆட்சியில் இருக்கலாம் என்பது மட்டுமே காவிப் பண்டாரங்களின் ஒரே திட்டம்.
சாதாரணமான இந்து எவனும் பிற மதத்தாரோது துவேஷம் பாராட்டுவதில்லை. அவனது மதம் அவனது சாமி அறை வரையில் மட்டும்தான். கோவிலுக்கு போனால், சாமியை கும்பிட்டு விட்டு, எதிரே வரும் இஸ்லாமியரை பார்த்து, எவனும் பிற மதத்தாரோது துவேஷம் பாராட்டுவதில்லை. அவனது மதம் அவனது சாமி அறை வரையில் மட்டும்தான். கோவிலுக்கு போனால், சாமியை கும்பிட்டு விட்டு, எதிரே வரும் இஸ்லாமியரை பார்த்து, “வணக்கம் பாய். எப்படி இருக்கீங்க” என்று கேட்டு விட்டு, தனது பக்தியை கோவிலோடு விட்டு விட்டு வருபவன்தான் சாதாரண பெரும்பான்மை இந்து.
ஆனால் உண்ணும் உணவு முதல், கழிவறை வரை, அனைத்திலும் மதத்தை புகுத்தி, பிற மதத்தினரை எதிரியாக பார்க்க வைத்து, அதில் குளிர் காய்வதைத் தவிர இந்த காவிப் பண்டாரங்களுக்கு வேறு நோக்கமே கிடையாது.
அப்படி பட்டாசு வெடிப்பது தொடர்பாகவும் மதச்சாயம் பூசி, அதை தங்களுக்கு சாதகமாக திருப்பி குளிர்காயலாம் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறு நோக்கம் கிடையாது.
-ராஜரத்தினம் சக்ரவரத்தி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக