tamilthehindu : சென்னை மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணியின் தொடர்
நடவடிக்கையாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 378 வீடுகளில் இன்று ஆய்வு
செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற வேலை குறித்து சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீவிர கொசு ஒழிப்பு பணியில் இன்று (07.10.2017) 200 வார்டுகளிலும்,1 வார்டுக்கு 1 குழு வீதம் மொத்தம் 200 குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணியில் 2916 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மலேரியா பணியாளர்களை கொண்டு 1,25,378 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 502 வீடுகளில் உள்ள கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன.
396 கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான்களும், 206 கையினால் புகைப்பரப்பும் இயந்திரங்களும், 34 வாகனம் மூலம் புகை பரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 32,861 வீடுகளில், 1107 செவிலியர்களால் காய்ச்சல் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு, அதில் 914 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
23 பள்ளிகளில் 176 செவிலியர்களால் காய்ச்சல் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு, அதில் 17 மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் கொசுப்புழு இருந்த இடங்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக 207 இடங்களில் கொசுப்புழுக்கள் உருவாகும் விதங்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து கண்காட்சி அமைத்து விளக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்டு, கொசுப்புழு இருந்த கட்டிடங்களில், கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக