வியாழன், 7 செப்டம்பர், 2017

டாக்டர் கிருஷ்ணசாமி பள்ளர் சாதியை சேர்ந்தவரே அல்ல? RSS சு சாமி கும்பலால் நுழைக்கப்பட்டவர்? வந்த வழியில் ஒரே மர்மம்!

டாக்டர் கிருஷ்ணசாமி ரெட்டியார் + பார்பனர் கிருஷ்ணசாமியின் அப்பா ரெட்டியார், அம்மா அருந்ததியர், மனைவி பிராமின்,மருமக பிராமின்.இவுங்க காப்பாத்தற இயக்கம் தேவேந்திரகுலம். ஒரு மெடிக்கல் காலேஜ் கட்ட எப்படி எல்லாம் உழைக்காறாரு
Murugan Kanna : கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்...
அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கிருஷ்ணசாமி கூட்டனி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.
கொடியன்குளம் தாக்குதலுக்கு காரனமான அதிமுகவுடன் 2011ல் கூட்டனி அமைத்து ஓட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 பரமகுடியில் தியாகி இம்மாணுவேல் சேகரன் நிணைவேந்தல் நிகழ்ச்சியில் பேரணியாக வந்த மக்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு 6 உயிர்களை படுகொலை செய்தனர். சில மாதங்களில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி ஆதரவளித்தார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி ,2016சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி அமைத்து தோல்வி அடைந்து விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணசாமி ஒரு மாநாடோ அல்லது கூட்டமோ கூட்டினாலே சாதாரனமாக 5 ஆயிரம் பேர் கூடுவார்கள். சமிபத்தில் ஜனவரி மாதம் நெல்லையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொன்ட புதியதமிழகம் கட்சி நடத்திய மாநாட்டில் 800 பேர் மட்டுமே கலந்து கொன்டனர் அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டார்.
எங்கோ இருந்து வந்த கிருஷ்ணசாமி தன்னை பள்ளர் சமுகததை சார்ந்தவன் என்று தான் சிபிஎம்எல் கட்சி மற்றும் தலித் பேந்தர் ஆப் இந்தியா அமைப்பில் இருந்தாக அறிமுகம் செய்து கொன்ட மருத்துவர் என்பதால் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இணைத்து தலைவராக்கப்பட்டார் ,மக்களிடம் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டார். மக்களிடம் தனக்கு ஆதரவு கிடைத்ததை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் அதன் பின்னர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இருந்து விலகி புதியதமிகம் கட்சியை 1997 டிசம்பர் மாதம் துவங்கினார். கட்சி துவங்கியதில் இருந்து இன்று வரை ஜாதிய ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூக மக்களை எந்த கட்சி ஆட்சியில் அரசால் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்கு அடுத்த தேர்தலில் அந்த கட்சியிடமே தேர்தல் கூட்டனி வைத்துக் வந்துள்ளார்.
கிருஷ்ணசாமி பள்ளர் சமுக மக்களிடம் அருகே அமர்ந்தோ சரி சமமாக உட்கார வைத்தாே தொட்டு பேசியதோ கிடையாது விலகியே இருந்து பேசுவார். பள்ளர் சமுக மக்களை அரசியல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொன்டதில்லை என்பது மாற்று தலைவர்கள் உருவாகவில்லை என்றும் வலைதளங்களில் ஆதரவாக எழுதுபவர்களின் கருத்துகளில் இருந்து நன்றாக தெரியும். பள்ளர் சமுக மக்களிடம் ஒன்றாமல் பள்ளர் சமுக மக்களுக்களை கொன்று குவித்தவர்களோடு கைகோர்த்தவர் எப்படி பளளர் சமுக மக்களின் தலைவராக இருக்க முடியும்.
தனது சுயநலத்திற்காக மக்களை வதைப்பவர்களுடன் கூட்டு சேரும் கிருஷ்ணசாமி உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட பள்ளர் சமுகத்தை சார்ந்தவரா என்ற சந்தேகம் ஒரு பக்கம் உள்ளது இந்த சூழலில் தற்போது பாஜகவுடன் இணைந்து கொன்டு பள்ளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நிக்க வேன்டும் என்று பள்ளர் சமுக மக்களின் பிரதிநிதிதுவ உரிமையை பறிக்க முயற்சிக்கிறார் மற்றும் நீட் என்ற சமுகநீதிக்கும சட்டத்திற்கும் எதிரான மருத்துவ நுழைவு தேர்வுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல் நீட்டின் பாதிப்பால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து உயிரை மாய்த்துக் கொன்ட மாணவி அனிதா இறப்பை மட்டுமல்லாமல் தன்னை விமர்சப்பவர்களை தாறுமாறாக நாகரிகமற்று அவதூறாக பேசி பள்ளர் சமுக மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்களாள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
உண்மையான ஒரு ஒடுக்கப்பட்ட சமுக பிரிவை சார்ந்த நபர் இவ்வாறு நடந்து கொள்ளவோ அவதூறாக பேசாவோ வாய்ப்பில்லை , கிருஷ்ணசாமியின் ஜாதி சான்று விவகாரத்தையும் திடிரென வந்ததும் சுப்பிரமணியசாமி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பால் களம் இறக்கப்பட்டவராக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக