செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

2thetimestamil : ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை எனலாம்.
அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது செப்டம்பர் மாத துக்ளக் இதழ். சோ.ராமசாமியின் மரணத்திற்கு பின் துக்ளகிற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பாரதீய ஜனதாவின், இல்லை இல்லை ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடுகளை வகுக்கும் குழுவில் ஒருவர் என்று விமர்சிக்கப்படும்,விதந்தோதப்படும் குருமூர்த்தியின் மன வக்கிரத்தை தாங்கியபடி இருக்கிறது அதன் முன் அட்டை.

நீட் மாணவி தற்கொலை என்று சிறு வட்டத்திற்குள் எழுதி, ஒரு பாடையை வைத்து அதன் பக்கத்தில் லுங்கி அணிந்த தாடி மீசை கிருதா வைத்த இருவர், அந்தப்பாடையை வைத்து பிச்சை எடுப்பதாக சுட்டிக்காட்டும் ஒரு கேலிசித்திரத்துடன் இருக்கிறது அந்த அட்டைப்படம்.
துக்ளக்கின் இந்த அட்டைப்படம் பார்ப்பனீய மனநிலையை அப்படியே வெளிப்படுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இராமயணமோ, துக்ளக்-கோ – அது காட்டும் கதை மாந்தர்களின் தோற்றம் கண்டே சொல்லி விடலாம். நீட் தேர்வும் ஒரு ஆரியர்-திராவிடர் போர்தான்.
மீசை, தாடி, சாரம்(லூங்கி/கைலி),
கருப்பு நிறம், வெட்டாத முடி என அயோக்கியத்தனமான கார்ட்டூனில் கூட நம்மை எவ்வாறு குறிக்கிறார்கள் என்று பாருங்கள்!
இது தான் அந்த ஏழெழுத்து..
Villavan Ramadoss
நான் 35 எடுத்தாலும் அதுதான் 100.
நீ 95 எடுத்தாலும் அது 35.
நாங்க சொல்றதுதான் டேட்டா.
பொணமானாலும் எங்காத்து பொண்ணு சுவாதித்தான் ஒசந்த பொணம்.
நாங்க பாவம் பண்ணினாலும் அது தர்மம்.
நீங்க தர்மம் செஞ்சாலும் அது பாபம்.
குருமூர்த்திஜி.

துக்ளக் குருமூர்த்தியின் சாதித் திமிர் தடித்தனத்தின் உச்சம். மரண மடைந்த மாணவியை இழிவுபடுத்துகிறார்.
எனக்கு ஓரளவிற்கு கேலி சித்திரங்களும் கோட்டோவியங்களும் வரைய வரும். தூரிகையால் மிகுந்த சிரத்தையுடன் தீட்டப்பட்டதாய் தோன்றும் ஓவியத்தைவிட, இந்த கேலி சித்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு நெளிவும், வளைவும், புள்ளியும், கோடுகளும் அத்தனை கவனத்துடன் முழு சுயப்பிரக்ஞையுடன் வரையப்படுபவை.
எதிர்க்கட்சி என்று காட்சிப்படுத்தப்பட்டவர்களை கவனியுங்கள். கருந்தேகம், தடித்த மீசை, ரோமக்கரங்கள், பரட்டை தலை, முரட்டு கிரிதா… அறுபதாண்டு காலமாக நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று வாய்க்கூசாமல் சொல்லும் அம்பிகளுக்கும் அவர்களது சொம்பிகளுக்கும் இருக்கும் மனசுத்தம் இப்படியானதுதான்.
அதை விடுங்கள். அந்த சடலத்தை வரைய அந்த ஈன கபோதிக்கு எப்படி கை வந்திருக்கும்? ஒரு வினாடி அந்த பிஞ்சு சடலத்தை அங்கே பொருத்தி பார்க்கவே கூசுகிறது.
கொலை செய்த குற்றவுணர்வு உங்களுக்கு இல்லாவிடினும் பரவாயில்லை. கொஞ்சம் கொண்டாடாமல் இருங்கள். ஏற்கனவே உங்களுக்கு பாவமன்னிப்பு மறுக்கப்பட்டிருக்கும்.
Don Ashok
இதோ சோ எனும் பார்ப்பானின் வழிவந்த குருமூர்த்தி எனும் பார்ப்பானின் துக்ளக் அட்டைப்படம். அதோ வெள்ளைத்துணியில் சுருட்டிவைக்கப்பட்டிருப்பவள் எங்கள் தங்கை அனிதா. அதோ பிணத்தைக் காட்டி பிச்சை எடுக்கும் லுங்கி கட்டிய ஆட்கள் அனிதாவிற்காக நியாயம் கேட்கும் நாங்கள். இந்த வக்கிரம் பார்ப்பானைத் தவிர இங்கே எவனுக்கு உள்ளது? பார்ப்பனியத்தை முதல் எதிரியாக நாங்கள் கருதுவது எப்படித் தவறு? ஸ்வாதி கொலையை வைத்து ஒய்.ஜி.மகேந்திரனும், எஸ்.வீ.சேகரும் ஒப்பாரி வைத்தார்களே, துக்ளக் அதை இப்படி வரைவாரா? நீங்களே சொல்லுங்கள். இதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் பாவப்பட்டியல் நிறைந்துகொண்டே இருக்கிறது. தயாராக இருங்கள். தயாராக இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக