வெள்ளி, 1 செப்டம்பர், 2017

டாக்டர் அனிதா... ஒரு கோடி தரம் உரத்து கூவுவோம் டாக்டர் அனிதா !



அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள் ? அனிதாவின் உடலை
யார் கையில் கொடுப்பது. பதவிக்காகவும், பணத்துக்காகவும் பேரம் பேசி குனிந்தே கிடக்கும் தமிழக ஆட்சியாளர்கள் கையில் அனிதாவைக் கொடுக்கக்கூடாது. நீட் என்ற பயங்கரவாதத்தைச் செலுத்தி மறைமுகமாகக் கொன்றிருந்தாலும், கையில் இரத்தக் கரையுடன் ஃபோட்டோக்களில் சிரித்துக்கொண்டிருக்கும் அரசாங்கத்திடமும் கொடுக்கக்கூடாது. அன்று மெரினாவிலும், நெடுவாசலிலும் கூடியிருந்த மக்களின் கையிலிருக்கும் மொபைல் டார்ச் லைட்டுகளைப் பிடுங்கிவிட்டு அனிதாவை சேர்ப்பது ஒன்றே அனிதாவுக்குச் செலுத்தும் அஞ்சலி. நூறு முறை சொல்வோம் டாக்டர். அனிதா என்று. வங்கக் கடலின் அலைகளும், காற்றும் அனிதாவின் டாக்டர் பட்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்க்கட்டும்.
Thameem Tantra
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அனிதா நல்ல மதிப்பெண் வாங்கியும், நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாள்.
நிற்க ! அனிதா செத்ததிற்கு பிறகு இரங்கல் தெரிவிப்போம்..
இப்போ "இதற்கெல்லாமா தற்கொலை செய்து கொள்வார்கள்", "மருத்துவம் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கா நம் கல்வி தரம் இருக்கிறது" என்று சில நாய்கள் சைக்கோலஜி கிளாஸ் பதிவு போடும்.. அவனை முதலில் செருப்பால் அடி ... அனிதா இறந்ததிற்கு அந்த கொலைகாரர்கள் தான் காரணம்.

ஆதிரா ஆனந்த்
மியான்மரை பார்த்து கதறிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலேயே அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்பட்டமான இன படுகொலை...
Vikkranth Uyir Nanban
கோழை.. தைரியமில்லன்னுலாம் சொல்லின்னு வராதீங்கடா..
அந்த பொண்ணு கோர்ட் வரை போய் வழக்கு போட்டு...கடைசி வரை போராடி யார் ஆதரவும் கிடைக்காம.. வேறு வழியில்லாம செத்திருக்கு...
Giridaran Giri
யாவருக்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டியவள்...
தமிழகம் மீண்டும் ஒரு போராட்ட பூமியாக மாற
வேண்டியதை உணர்த்தியுள்ளது அனிதா மரணம் Neet
Naresh Babu
அனிதாவின் ரத்தக்கரையை எதைக்கொண்டு கழுவுவது ???
எழில் ரா
அரியலூர் அனிதாவோட தற்கொலை முடிவு சரியா தவறான்ற பட்டிமன்றத்த நிறுத்திட்டு நீட்ட தூக்கியடிக்க என்ன செய்யணுமோ அத யோசிங்கய்யா
ஆதிரா ஆனந்த்
வழியெங்கும் பிணங்கள்... ModiShouldResign
Shan Karuppusamy
எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன்
என்ன எழுதிக் கிழித்து என்ன ஆகப்போகிறது
இனி நீ திரும்பவா போகிறாய் அனிதா...
ஆதிரா ஆனந்த்
Government is a Blue Whale. Where ANITHA crossed the 50th day, .......

Bala Salem
வழக்கு தொடுத்தது என் ஒருத்திக்காக மட்டுமல்ல.. என்னை போன்ற பலருக்காகவும்தான் என்று சொல்லிக்கொண்டே இருப்பாளாம்...!
பதவிக்காகவும், பணத்துக்காகவும் அடித்துக்கொள்ளும் பிசாசுகளும், அவர்களுக்கு கூஜா தூக்கும் அல்லக்கைகளும் இரவு படுக்கும்முன், அனிதா வயதில் உங்களுக்கு மகள் இருந்தால்... 5 நிமிடம் அவளை பார்த்துவிட்டு படுங்கள்... ச்சை...
Kalidass Sekar
இப்படி ஒரு கேடு கெட்ட அரசாங்கம் இருக்குற வரை..
இன்னும் எத்தன அனித்தாக்கள் மரணிக்க போறாங்களோ...
நீட் என்னும் கொடிய அரக்கன்.
Elambarithi Kalyanakumar
அவள் சாகடிக்கப்பட்டுவிட்டாள்.
கொன்றவர்கள் இந்த மரணத்திற்கு என்னவெல்லாம் காரணம் கற்பிக்கப்போகிறார்கள் என்று நினைத்தால் பதறுகிறது.
Babu Rajendran
ஆண்மையற்ற ஆட்சியாளர்கள் உள்ளவரை அப்பாவி அனிதாக்கள் மரித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
நீட்டுக்கு சப்போர்ட் பண்ண அத்தனை எச்சபொறுக்கி நாய்களுக்கும் நல்ல சாவு வராதுடா
Ezhilan M
மானங்கெட்ட ஈத்தரைங்க..
சாவு வீட்டுக்கு கட்சி கொடியை தூக்கிட்டு வந்துட்டாங்க..
Sasi Maaries
கனவுகளை கொலை செய்துவிட்டார்கள்...
Kartik Raj P
வேறு காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவை, அரசியல் கட்சிகள் சேர்ந்து நீட்டால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறார்கள் - கிருஷ்ணசாமி பேட்டி..
இந்த பேட்டி எல்லாம் உனக்கு தேவையா பையா?!
Thamim Ansari
ஆளும் அதிமுக ,பாஜாக அரசே உங்கள் கடவாய் ஓரமாக ரத்தகறை இருக்கு பாருங்க....

தோழர் முத்துக்குமரன்
ஆயிரம் பேரைக் கொன்னா அரை வைத்தியனாம்.....
வைத்தியச்சி ஆகப் படிக்க நெனைக்கிறவள கொன்னா????
Sylvia Nithia Kumari
ஒரு வருசம் வீட்டுல் சும்மா உட்கார முடியாதுடா பணத்திமிர் புடிச்ச நாய்களா? அந்த பொண்ணு அரியர்ஸாடா வச்சுச்சு.?
ஏழைங்களோட, அன்னாடங்காய்ச்சிங்களோட செருப்பை போட்டு பாருங்கடா? அவங்க வலி தெரியும்.
Senthil Kumar K
தற்கொலை தீர்வல்ல அப்டின்னு எவனாச்சும் கிளம்பிடாதிங்கடா... ஏன்னா இது ஒரு கொலை. அப்பட்டமான கொலை. பல்வேறு தடைகளுக்கு பின் எடுத்த 1176மதிப்பெண்கள் நிச்சயமாக சாவதற்கு எடுத்திருக்க மாட்டாள் அனிதா.
காசிருப்பவன் மட்டுமே வாழக்கடவன் என்பதன் அர்த்தம்தான் இந்த கொலை.
Thangam Thenarasu
நீ(ட்)டு துயில் நீக்கப் பாடி வந்த நிலவொன்று கனவுகள் சிதைந்து களப்பலி ஆனது
Kavi Arasu
அனிதாவைக் கொன்றது அறிவிக்கப்பட்ட அரசபயங்கரவாதம், அதைத்தவிர வேரொன்றுமில்லை!
Raja M Raja
திராவிட வேட்டை நாய்களின் குரைப்பை குறை சொல்லி முடக்கி வைத்தால்...
இந்தியப் பாம்புகளிடம் குஞ்சுகளை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை...
திராவிடமே சமூக நீதி..
Chozha Rajan
அரசு எடுத்த முயற்சிகள் எல்லோருக்கும் தெரியும் என்கிறார் விஜயபாஸ்கர்...
அதான் தெரியுமே, ரெய்டு விவகாரத்தை மூடுறதுக்கு மூச்சுக்கு முன்னூறு தடவ போனீங்கன்னு பாத்தமே...
Sylvia Nithia Kumari
நீட் மசோதா பைல் எங்க இருக்குன்னு தெரியல ன்னு.. பொறுப்பில்லாமல் பேசிய நிர்மலா சீத்தாராமன் முதல் கொலை குற்றவாளி ..???
Mailai Nathan
மேட்டுகுடி தன்மை கொண்ட நாய்களே,
அவள் ஒன்றும் கோழையல்ல, தன்னால் முடிந்த வரை போராடி விட்டு தான் தன்னை மாய்த்து கொண்டிருக்கிறாள், அவள் வளர்ந்த சூழலுக்கு அது எத்தனை வலிமிகுந்த போராட்டம் நிறைந்த வாழ்க்கை என்பதை அவள் நிலையில் நம்மை பொருத்தி பார்த்து பேசுவது தான் மனித தன்மை...
JS Karthik
பதவிக்கும்... பணத்திற்கும்... ஆசைப்பட்டு....
தமிழ்நாட்டையே...
காவிகளிடம் விற்று விட்ட...
இரு... ஈன அடிகைள்தான்...
அனிதாவின்...
இந்த முடிவிற்கு.. முழுக்காரணம்......
Mailai Nathan
Blue whale மட்டுமல்ல NEETம் உயிர் குடிக்கும் சாத்தான் தான் !!
Vani Maheswari
ஒருத்தி தற்கொலை செய்து கொண்டால் "மனநலஆலோசகரிடம்" எதுக்கு மைக்கை நீட்டுகிறீர்கள்.
முதலமைச்சரை அரசை நோக்கி மைக்கை நீட்டுங்கள் கையாளாகாத ஊடகமே
Ilanchezhian Rajendran
விவசாயிகளை , தொழிலாளர்களை நிர்வாக சீர்கேட்டால், அலட்சியத்தால், "தற்கொலை" செய்த அதிமுக/பாஜக அரசு, இப்போது மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை.
அருமைதாசன் சந்தனசாமி
காத்திருக்கோம்..
நாங்க காத்திருக்கோம்
..
சோத்துக்கு மட்டுமே வாய் திறக்கும்..
சோதாபயலுக ஊர்ல வந்து பொறந்துட்டியே தாயி..
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா
அராஐக அரசை எதிர்க்க துணியும்
ஆம்பளைங்க இருக்க ஊர்ல பொறக்கனும்மா நீயி..
..
நீ போன சோகத்தை எண்ணி
அரட்டத்தான் முடியுதிந்த அண்ணனால..
அத தவித்து ஆம்பளையா
என்னால ஆகப்போறது ஒன்னுமில்ல..
..
உன் கனவ சிதைச்சி சிறகொடிச்ச
கார்பரேட்டு கைகூலிகள
கவர்மெண்ட்டு களவாணிகள
கழுவிலேத்தி காவுவாங்க
யாராவது வருவாங்கன்னு ..
காத்திருக்கோம்
நாங்க காத்திருக்கோம்
..
சோத்திலடிச்ச பிண்டங்களாய்..
செவுத்துலடிச்ச சாணியாய்..
மீசை வச்ச பொட்டைகளாய்..
காத்திருக்கோம்
நாங்க காத்திருக்கோம்..
-லாக் ஆஃப்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக