பீகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கடும் தண்டனைச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட விரோதமாக கள்ளச் சாராயம், வெளிநாட்டு மது மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலைய கிடங்கில் வைத்துவந்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பலகோடி ரூபாய் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் போலீஸார் கடந்த மே மாதம் குற்றம்சாட்டினர். அது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு எலிகளே காரணம் என இரு அமைச்சர்கள் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 31) கூறியுள்ளனர்.
பீகாரில் உள்ள கமலா பாலன் ஆற்றின் கரையோரத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு எலிகள்தான் முக்கிய காரணம் என நீர்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “கமலா பாலன் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் உணவு தானியங்களைச் சேமித்து வைக்கின்றனர். அவை எலிகளை ஈர்ப்பதால், தானியங்களை உண்ணுவதற்காக எலிகள் ஏரிக்கரைகளில் துளைகளை உருவாக்குகின்றன. எனவே தான் வெள்ளம் ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
சிறு நீர்ப்பாசனம் மற்றும் பேரழிவு மேலாண்மை அமைச்சர் தினேஷ் சந்திரா யாதவ், “எலிகள், கொசுக்கள் ம்புட்ச்சிய்னாட்கத உள்ளது. நீண்ட நாள் பிரச்சனையாக இருந்தாலும், உங்களால் என்ன செய்ய முடியும்? அந்த இடத்திலிருந்து எப்போதும் எலிகளை விரட்டிக்கொண்டிருப்பீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சுமார் 514 பேர் உயிரிழந்தனர். 1.7 கோடி மக்கள் வீடுகள் இன்றி பாதிக்கப்பட்டனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 43.03 லட்சம் மதிப்புள்ள நன்கொடைகள் இன்று (செப்டம்பர், 2) முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. மாநில கிராமப்புற வேலைவாய்ப்பு அமைச்சர் ஷைலஷ் குமார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் 1.01 லட்சம் ரூபாய் காசோலையை ஒப்படைத்தார். மேலும், அவர் முதலமைச்சரின் நிவாரண நிதியில் தனது துறை சார்பாக 15 லட்ச ரூபாய் காசோலையை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வேலைகளுக்கு நன்கொடை வழங்கிய மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் முதல்வர் நிதீஷ்குமார் நன்றி தெரிவித்தார் மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக