சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது.
அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு
கடந்த 10-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தீவிர கண்காணிப்பு
சிறுநீரகம் செயலிழந்ததால், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. கல்லீரல், சிறுநீரகம் வேண்டி தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை உறுப்புகள் கிடைக்கவில்லை.
பிரபல கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர், நடராஜனை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். உறவினர் ஒருவரின் பகுதி கல்லீரலை தானமாக பெற்று அவருக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்துச் செல்கின்றனர். tamilthehindu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக