வெள்ளி, 29 செப்டம்பர், 2017

பேராசிரியர் காஞ்ச அய்லயாவுக்கு எதிராக கொலைவெறி ... ஆந்திர "பிராமணர் சங்கம்


Ezhirko Pamaran Shanmugasundaram : மெளனம் நமது எதிரி மாபெரும் சிந்தனையாளரும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தமது குரலை ஓயாது எழுப்பி வருபவருமான பேராசிரியர் காஞ்ச அய்லயா பேராபத்தில் இருக்கிறார். . அவர் அண்மையில் ஆராய்ச்சிபூர்வமாக எழுதிய புத்தகத்திற்காக கிடைத்திருக்கும் பரிசு : கொலை வெறித் தாக்குதல் மற்றும் கொடும்பாவி எரிப்புகள். . ஆந்திரா தெலுங்கானா முழுவதும் ஆரிய வைசிய சாதி வெறியர்கள் (குறிப்பாக ஆந்திர "பிராமணர் சங்கம்") பேராசிரியர் காஞ்ச அய்லயாவுக்கு எதிராக ஊடகங்களில் ஓலமிடுகிறார்கள். . பேராசிரியரை சாதிவெறியர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மனிதநேயத்திற்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. . இப்பொழுது தன்னைத் தானே வீட்டுக் காவலில் இருத்திக் கொண்டிருக்கிறார் பேராசிரியர். . எதுவும் வந்தபிறகு வருந்தி துயரப்படுவதைவிட வரும் முன் காப்போம். . ஆம் . மெளனம் நமது எதிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக