வியாழன், 7 செப்டம்பர், 2017

நீட் .. வர்க்கம் பார்வை கூட இல்லையென்றால், சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியா?

விவேக் மாவோயிஸ்ட் : சி.பி.எம். கட்சியினர் தாம் கேரள மாநிலத்திலும், பிற
மாநிலங்களிலும் நீட் தேர்வை ஆதரிக்கும் தவறை மழுப்பவதற்காகத் தொடர்ந்து சில வாதங்களை முன் வைக்கின்றனர்.
தாங்கள் ஆளும் மாநிலங்களில் கல்வி 'தரம்' மேலாக உள்ளது என பெருமை பேசி வருகின்றனர். அந்த தரம் பற்றியும் கிழிக்கலாம்தான்.ஆனால், விசயம் திசை திரும்பி விடும் என்பதால், இவர்களின் 'தரத்தை' விட்டு விடுவோம்.
நீட் கல்வி தரம் பற்றியது என்பது ஆளும் வர்க்கத்தின் திசை திருப்பும் வாதமே.
நீட் ஏழை மக்களின், கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை பறிக்கிறது என்பது பாமரன் முதல்அறிவு ஜீவிகள் வரை அறிந்த உண்மை. இந்த வர்க்கம் பார்வை கூட இல்லையென்றால், சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியா?
மேலும் சாதியம், ஆணாதிக்கம் போன்ற ஏற்றத்தாழ்வுகள் பலமாக உள்ள ஒரு நாட்டில் இத்தகைய 'தகுதி' தேர்வுகள் அப்பட்டமாக சமூக நீதிக்கும், சமத்துவமும் சிந்தனைக்கும் எதிரானவை என்பது சிபிஎம்முக்கு தெரியாதா?
புதிய. கல்விக் கொள்கை என்ற மேட்டுக்குடி கல்விக் கொள்கை கொண்டுவந்த நவோதயா பள்ளிகளின் தொடர்ச்சிதானே நீட்டும்.
மேலும், ஒரு objective வகைத் தேர்வு கொண்டு அறிவை அளப்பது தான் மார்க்சியமா?

நீட்டின் குட்டி மாதிரியான வியாப்சம் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் ஊழலையும், 50-க்கும் மேற்பட்டோரின் உயிரையும் பறித்த பிறகும் , நீட் கேள்வித்தாள் அமெரிக்காவில் இருந்து. விற்பனை செய்யப் பட்ட சேதி நாறிக் கொண்டு உள்ள போதும், நீட்டை வெறும் கல்வித்தரம் சார்ந்த விசயமாக்குவது அயோக்கியத்தனமல்லவா?
கம்யூனிஸ்ட்டுகள் கொள்கையை விட்டு விட்டு, நடைமுறை சாத்தியம் பற்றி பேசுவது சந்தர்ப்பவாதம்.
சிபி எம் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் நடத்தப்படும் இந்தி- ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து நிற்பதில்லை.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதில்லை.
மோடியின் பாசிச ஆட்சி பற்றி கூட முடிவு எடுக்க வில்லை.
லால்கர், சிங்கூரில் வளர்ச்சி என்ற பெயரில் ஏழை விவசாயி நிலத்தை கார் பரேட்டுகளுக்கு பிடுங்கி தந்தது- எல்லாவற்றுக்கும் நடைமுறை காரணங்களைக் கூறி ஏமாற்றுகிறது. உண்மையில் இந்த நடைமுறை ஏகாதிபத்தியங்களுக்கும் தரகு முதலாளிகளுக்குமே உதவி செய்கிறது.
இதை சிபி எம் மில் புரட்சியை நேசிப்பவர்கள் யோசிப்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக