செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ரகுராம் ராஜன் : எச்சரித்தேன் !நோட்டு செல்லாத அறிவிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என...

புதுடில்லி: ;செல்லாத நோட்டு குறித்த அறிவிப்பு, நீண்ட கால பயனை விட, குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தி விடும்' என, மத்திய அரசை எச்சரித்த தாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார். பழைய,500-1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு, 2016, நவ., 8ல் அறிவித்தது. இந்த நடவடிக்கையால், பொருளாதார பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்,ரகுராம் ராஜன்,இவ்விவகாரம் தொடர் பாக, கருத்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரி யராக தற்போது பணியாற்றி வரும் அவர், பொருளாதார சீர்திருத் தங்கள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகம் விரைவில் வெளியிடப்படுகிறது. இது பற்றி,ரகுராம் ராஜன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியுள்ள தாவது:செல்லாத நோட்டு குறித்த அறிவிப்பு பற்றி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன்ஆலோசனை நடத்தியது. இதுபற்றி முதலில் என் கருத்தை வாய்மொழியாக தெரிவித்தேன்.பின், இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிக்கை அனுப்பினோம். செல்லாத நோட்டு அறிவிப்பு, நீண்ட கால பயனை கருத்தில் கொண்டு. செய்யப்பட்டது; இருப்பினும், அது, குறுகிய காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என, மத்திய அரசை எச்சரித்தேன்.

கறுப்பு பணத்தை ஒழிக்க, இதற்கு பதிலாக வேறு வழியை நாடலாம் எனவும் கூறினேன். இருப்பினும், அது அரசின் கொள்கை முடிவு. செல்லாத நோட்டு அறிவிப்பால், பொருளாதார பயன் கிடைத்ததாக கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக