கீழடியில் இதுக்கு மேல் ஒன்றும் இல்லை மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்று என்று சொல்லி மூட தயாராகி விட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம்.
பாலமுருகன். தெ ,வி.சதிஷ்குமார் சிவகங்கை மாவட்டம் .கீழடியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு பணி இந்த மாதம் 30 -ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் கீழடி குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கின்றது. முந்தைய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்தும் கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருகளை இங்கேயே வைத்து மியூசியம் அமைக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு மீண்டும் 21 -ம் தேதி வர இருக்கிறது. இந்த நிலையில் நீதிபதிகள் திடீரென இன்று மாலை கீழடிக்கு வருவதாக தகவல் கிடைத்தது. கீழடியில் இதுக்கு மேல் ஒன்றும் இல்லை மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்று என்று சொல்லி மூட தயாராகி விட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம்.
நீதிபதிகள் சதீஸ்குமார், சுந்தரேசன் ஆகியோர் கீழடியை பார்வையிட்டார்கள்.
அப்போது நீதிபதிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் இங்கு அருங்காட்சியகம் அமைக்க முடியுமா? எனக் கேட்டனர். ”இங்கு அருங்காட்சியம் அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. திருட்டு நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். நகரத்தில் இருந்து தூரமாக இருக்கிறது. ஆகையால் பராமரிப்பது ரொம்பக் கஷ்டம். அதே நேரத்தில் இது அரசாங்கம் முடிவு பண்ண வேண்டிய விஷயம்” என்றார். நீதிபதிகள், ”இங்குள்ள பொருட்கள் எவ்வளவு வருடங்கள் பழமையானது?’ என்று கேட்டார்கள். ஒவ்வொரு லேயரும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளது. இங்குள்ள பானைகள் எல்லாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்றார் ஒரு தொல்லியல்துறை அதிகாரி.
மேலும் நீதிபதிகள் என்னென்ன பொருள்கள் கிடைத்திருக்கிறது என்று கேட்க, “இங்கிருந்து அதிக அளவில் பாசிமணிகள் கிடைத்திருக்கிறது. தங்கம், செப்பு, உறைகிணறு கிடைத்திருக்கிறது. பிராமி தேவநாகரி எல்லாம் தமிழுக்கு பிறகே உருவாகியிருக்கிறது. மதுரையைச் சுற்றி தமிழ் எழுத்துகள் மேட்டுப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம் போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுவதோடு தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் தமிழ் எழுத்துகள் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். அகழ்வராய்ச்சிக்கு நிலம் கொடுத்த விவசாயி சந்திரன் நீதிபதிகளிடம், கண்காணிப்பாளர் ஸ்ரீராம் பற்றியும் நிவாரணம் கொடுக்காதது பற்றியும் முறையிட்டார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக