புதன், 13 செப்டம்பர், 2017

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. அழைப்பு .. நாளை ..

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன்
கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன்: நாளை ஆஜராக உத்தரவு புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீடு பெற்றுத் தந்ததன் மூலம் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. கார்த்தி சிதம்பரத்தை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்து உள்துறை அமைச்சகம் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததுடன், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம், அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக