ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

யாதவ சமையல்காரி தனது சாதியை மறைத்ததாக பார்ப்பன பெண் போலீசில் புகார்! உத்தரபிரதேசம்

சாதியை மறைத்து தன்னிடம் சமையல் வேலை செய்ததாக பெண் மீது
போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பெண் அதிகாரி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானிலை ஆய்வு மையத்தில் துணை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றுபவர் மேதா விநாயக் கோலே. இவரிடம் கடந்த ஆண்டு முதல் சமையல் வேலை செய்து வந்தவர் நிர்மலா யாதவ் என்ற பெண். வியாழக்கிழமை மாலை சின்ஹாகாட் காவல் நிலையத்தில் மேதா அளித்த புகாரில், ‘‘தன்னிடம் சமையல் பணி செய்து வந்த நிர்மலா யாதவ் என்ற பெண், தனது சாதியை மறைத்து உயர் சாதியைச் சேர்ந்தவர் போல நடித்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சமீபத்தில்தான் அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்ததாகவும் நிர்மலா யாதவ் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.
தனது மத நம்பிக்கை புண்பட்டுள்ளதாகவும் புகாரில் மேதா கூறியுள்ளார். நிர்மலா மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், அமைதியைக் குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.
 இதுபற்றி நிர்மலா கூறுகையில், ‘‘நான் வேலையில் சேர்ந்த போது எனது சாதி பற்றி மேதா கேட்கவி்ல்லை. நான் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவள் என்று தெரிந்ததும் என் வீட்டுக்கு வந்து என்னை மேதா தாக்கினார். செல்போனையும் தூக்கி வீசினார்’’ என்றார். இதற்கிடையில் மராத்தா அமைப்புகள் மேதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக