வெள்ளி, 8 செப்டம்பர், 2017

தடையை உடைத்து திருச்சி பொதுக்கூட்டம்... மக்கள் கூட்டம் அலைமோத வெற்றிகரமாக...

தடையை மீறி பொதுக்கூட்டம்! அனிதாவுக்கு அஞ்சலி! உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காட்டி நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கண்டன பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதியை ரத்து செய்து, கூட்டத்திற்கு தடை விதித்தது. போராட்டங்களுக்குத்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என்று கூறி, காவல்துறை விதித்த தடையை மீறி, திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர். கண்டன கூட்டத்தின் முதல் நிகழ்வாக மறைந்த மாணவி அனிதாவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேடையில் இருந்த தலைவர்கள், கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக