சனி, 2 செப்டம்பர், 2017

தன்னெழுச்சியான மக்கள் போரே நீட் அரக்கர்களை வெல்லும்! அனிதாக்களின் உயிரை பறித்தவர்கள்!

நந்தன் ஸ்ரீதரன் : முகநூல் வரவே அச்சமாக இருக்கிறது. இரவு முழுக்க அனிதாவின் மரணம் உறங்க விடாமல் அடித்துக் கொண்டிருந்தது..
முல்லைப் பெரியாறு பிரச்சினையின்போது தேனி மாவட்டத்தில் ஓர் எழுச்சி தோன்றியது. பெண்கள் முல்லைப் பெரியாறுக்காக பொங்கல் வைத்தார்கள். லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு கேரள எல்லை நோக்கி சென்றார்கள்..
அதைக் கண்டு ஜெயா அரசு நடுங்கியது. ஜெயா அரசு மட்டும் அல்ல. இவ்வளவு நாளும் தமிழர்களை அடித்து உதைத்தே பழக்கப்பட்ட மலையாளிகளும் நடுங்கிப் போயினர். அதன் பின்னர்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எல்லை மலையாளிகள் தமிழர்களை மரியாதையுடன் நடத்தத் துவங்கினர்.. அது மாதிரி ஓர் எழுச்சிதான் இப்போதைய தேவை.. எந்த மயிரானும் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருக்கும் அரசியல்வாதி எவனும் ஊழல் செய்யாதவன் இல்லை.ஊழல் செய்யாத ஒரு சில அரசியல்வாதியும் தமிழர்களுக்கு ஆதரவானவன் இல்லை.. நல்ல அரசியல்வாதிகளையும் இந்த டெட்பாடி அரசு சிறையில் வைததிருக்கிறது..

தன்னெழுச்சியான மக்கள் போரே நம் மானத்தை காப்பாற்றும்..
தன்னெழுச்சியான மக்கள் போரே இந்த கணத்தில் மிக மிக அவசியம்..
மக்கள் கூட வேண்டும். ஊழல் பெருச்சாளிகளை துரத்தித் துரத்தி அடிக்க வேண்டும். அனிதா எனும் நெருப்பு தமிழகத்தை பற்றி எரிய வைக்க வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை மக்களே..
சட்டக் கல்லூரி மாணவர்களும் மருத்துவக் கலலூரி மாணவர்களும் இணைந்து முத்துகுமார் ஈகையின்போது போராடினார்கள். எங்களைப் போன்றோர் பின்னணியில் இருந்து ஆதரித்து கூடப் போராடினோம். அந்தப் போராட்டத்தை கருணாநிதி அரசு காங்கிரஸ் அரசின் ஆணைக்கிணங்க ஒடுக்கி நசுக்கியது..
டெட் பாடி அரசும் அந்த முயற்சிகளை செய்யும்.
இதற்கு சளைத்து விடாமல் அரசை திகைக்க வைத்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும்.
இந்த விழிப்புணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வர வேண்டும்..
வருமா.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக