புதன், 13 செப்டம்பர், 2017

.முதியவர்களை காட்டுக்குள் அனுப்பி புலிக்கு இரையாக்கும் உத்தர பிரேதேசம் ..யோகி காபினெட் ஆலோசனை ..

Mp Saam உத்தர பிரதேச விவசாயிகளுக்கு வெரும் 10 ரூபா,20 ரூபா,215 ரூபா
கடன் தள்ளுபடி பத்திரம் கொடுத்த ஆலோசனை மன்றம்.குழந்தைகளுக்கு அவசர சிகிச்சைக்கு வழங்கக்கூடிய ஆக்ஸிஜன் செலவுக்கு பதிலாக வேறு வாயு வழங்குவது குறித்து ஏதாவது சிறப்ப திட்டம் வெளியிடலாம். #ஒன்னும் சொல்லற மாதிரி இல்ல.

உத்தரபிரதேச கிராம மக்கள், அரசிடமிருந்து இழப்பீடு பெறுவதற்காக தங்கள் குடும்பத் தைச் சேர்ந்த முதியவர்களைக் காட்டுக்குள் அனுப்பி புலிக்கு இரையாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபித் புலிகள் சரணாலயம் உள்ளது. அடர்காடு நிறைந்த இந்தப் பகுதிகளில் அடிக்கடி புலிகள் தாக்கி முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு புலிகள் தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வனவி லங்கு குற்றத் தடுப்பு அமைப்பின் அதிகாரி கலீம் அத்தர், பிலிபித் புலிகள் சரணாலயத்தை ஒட்டிய பகுதியில் நடக்கும் புலிகள் தாக்கு தல் சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்து தனது அறிக்கையை உயர் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளார்.
சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்களைப் புலிகளுக்கு இரையாக்கும் உள்நோக்கத்துடன் வனப்பகுதிக்கு அனுப்பி உள்ளனர். புலிகளால் தாக்கப் பட்டு இரையானவர்களின் மீதி சடலத்தைக் கொண்டுவந்து நிலப்பகுதியில் கிடத்திவிடுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது.
அதன் பின்னர் புலிக்கு இரை யான சடலத்தை அதிகாரிகளிடம் காட்டி, காட்டிலிருந்து இரை தேடிவரும் புலிகள் தாக்கி இறந்ததாகக் கூறி இழப்பீடு பெற்று வந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வனப் பகுதியில் புலி தாக்கி இறந்தால் இழப்பீடு கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் குடும்ப வறுமை சூழலை சமாளிக்க இழப்பீடு பெறு வதற்கான இந்த உத்திக்கு முதியவர்களும் உடன்பட்டு காட்டுக்குள் செல்ல முன் வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 1-ம் தேதி இரைதேடி மக்கள் வசிப்பிடத்துக்கு வந்த புலி தாக்கி 55 வயது பெண் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரியிடம் கிராம மக்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்தைப் பார்வை யிட்ட வனப் பாதுகாவலர் வி.கே.சிங், கிராம மக்களின் கூற்றை ஏற்க மறுத்தார். வனப் பகுதிக்குள்தான் அந்தப் பெண் பலியானதாகவும் பின்னர் அவரது சடலத்தை அங்கிருந்து எடுத்து வந்து நிலப்பகுதியில் போட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக